உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், கோயில் கட்டுமானத்திற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு ஆகஸ்ட் 5, 2020 அன்று கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை பிரதமர் நரேந்திர மோடி செய்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது.
1,800 கோடி ரூபாய் செலவில் தயாராகும் இக்கோவிலை 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குள் முக்கிய கட்டுமான பணிகள் உட்கட்டமைப்பு வசதிகளை அரசு மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி அயோத்தியில் ரூ.1,000 கோடி ரூபாய் மதிப்பில் சாலை கட்டுமான பணிகளுக்குஉபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டம் குறித்து அரசு செய்தி தொடர்பாளர் கூறுகையில், "ராம ஜென்ம பூமிக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் விரிவுபடுத்தப்பட்டு, பக்தர்கள் வசதியாக சென்று வரும் சூழலை உருவாக்க இந்த மெகா திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு, அப்பகுதியில் வசிப்பவர்களுக்கும், கடை வைத்திருப்பவர்களுக்கும் மறுவாழ்வு நிவாரணங்கள் விரைந்து வழங்கப்படும். சுக்ரீவ கோட்டையில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படும்.
இதற்கு ராம ஜென்ம பூமி கோயில் வழி என்று பெயரிடப்படும். இதேபோல் கோயிலை சுற்றி பல அகலப்பாதைகள், உருவாக்கப்பட்டு கோயிலை சுற்றி சிறந்த சாலை கட்டுமான வசதிகள் அமைக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: அக்னிபத் திட்டம் மூலம் 3000 வீரர்கள் கடற்படையில் சேர்ப்பு - தளபதி ஹரி குமார் தகவல்
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அயோத்தி ராமர் கோயிலை சிறப்பாக கட்டி முடித்து பக்தர்கள் வழிபாட்டிற்காக திறக்க மத்திய, மாநில பாஜக அரசுகள் திட்டமிட்டுள்ளன. மேலும், அயோத்தியை முன்னணி ஆன்மீக சுற்றுலாத்தலமாக உருவாக்கும் நோக்கில் இந்த கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayodhya, Ayodhya Ram Temple, Yogi adityanath