உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உயிரிழப்பு

கல்யாண் சிங்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 89.

  • Share this:
    கல்யாண் சிங் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1992 வரையிலும், 1997 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச மாநில முதல்வராக இருந்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. டிசம்பர் 26, 1992ல் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கல்யாண் சிங் ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அவருக்கு உடல்நிலைக் குறைபாடு ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்து அவர் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல் அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவருக்கு சிறுநீரகக் கோளாறு, இதயக்கோளாறு, நரம்பியல் பிரச்சினை இருந்து வந்தநிலையில், உள் உறுப்புகள் செயலிழப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கல்யாண் சிங் மறைவுக்கு பாஜக பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Karthick S
    First published: