பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம்.
உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மார்ச் 3 மற்றும் மார்ச் 7-ம் தேதியான இன்று 7 கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த இடங்களில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கருத்துகணிப்பு முடிவுகளின் நிலவரங்களின் படி உத்திரபிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என முடிவுகள் வெளியாகி உள்ளன.
உத்திரபிரதேசம் சட்டமன்ற தேர்தல் NewsX கருத்துகணிப்பு வெளியீடு
பாஜக கூட்டணி - 225
சமாஜ்வாதி கூட்டணி - 148
காங்கிரஸ் - 6
பகுஜன் சமாஜ்வாதி - 24
மற்றவை - 0
NewsX கருத்துகணிப்பின் படி உத்திரபிரதேசம் சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு
கருத்துக்கணிப்பு முடிவுகளை ShareChat-லும் தெரிந்துகொள்ளலாம்.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.