ஹோம் /நியூஸ் /இந்தியா /

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம்! - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம்! - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

முலாயம் சிங் யாதவ்

முலாயம் சிங் யாதவ்

முலாயம் சிங் யாதவ் தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறார். அவர் மேதாந்தா மருத்துவமனையின் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம், குருகிராம் மருத்துவமானையில் முலாயம் சிங் யாதவ் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, டெல்லி அருகே மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அக்டோபர் 2ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

  இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முலாயம் சிங் யாதவ் தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறார். அவர் மேதாந்தா மருத்துவமனையின் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருக்கு நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.” என குறிப்பிடப்பட்டிருந்தது.

  உயிர்காக்கும் மருந்துகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தாலும், அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  இதையும் வாசிக்க: 4 நுழைவுவாயில்கள், 25 கண்காணிப்பு கோபுரங்கள்... ரூ.360 கோடியில் பிரதமருக்கு பிரமாண்ட வீடு கட்டும் மத்திய அரசு..!

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Hospitalised, Samajwadi party, Uttar pradesh