Home /News /national /

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு!

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு!

பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி மக்களவைத் தொகுதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் ஆசம்கர் மக்களவைத் தொகுதி ஆகியவற்றுக்கு உட்பட்ட பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான 7-வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் திங்கட்கிழமை நடைபெறுகிறது. 54 தொகுதிகளுக்கு நடைபெறும் வாக்குப்பதிவை அமைதியான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

    உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதில், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

    அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 6 கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில், 7-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு திங்கட்கிழமை நடைபெறுகிறது.

    இதையும் படிங்க - ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த கோரி பதாகை ஏந்திய மணமக்கள்

     பூர்வாஞ்சல் பகுதியில் உள்ள 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட 54 தொகுதிகளுக்கு இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி மக்களவைத் தொகுதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் ஆசம்கர் மக்களவைத் தொகுதி ஆகியவற்றுக்கு உட்பட்ட பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதில், 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 கோடியே 6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.  காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.

    இந்தத் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பதிவான வாக்குகள், வரும் வியாழக்கிழமை எண்ணப்படுகின்றன.

    5 மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், திங்கட்கிழமை மாலை வெளியாகின்றன.  இந்தத் தேர்தலில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும், பஞ்சாப்-பில் கூடுதல் இடங்களில் வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Election 2022, Uttar pradesh

    அடுத்த செய்தி