ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெண் நோயாளிக்கு மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்புணர்வு.. மருத்துவர், உதவியாளர் கைது!

பெண் நோயாளிக்கு மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்புணர்வு.. மருத்துவர், உதவியாளர் கைது!

சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த மருத்துவர் கைது

சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த மருத்துவர் கைது

உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் கடந்த 3 நாள்களில் 5 பாலியல் வன்புணர்வு குற்றங்கள் பதிவாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு மயக்கு மருந்து கொடுத்து மருத்துவரும் உதவியாளரும் பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

  உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் கடந்த சில நாள்களாகவே பாலியல் வன்புணர்வு குற்றங்கள் தொடர்ந்து பதிவாகி வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் 4 பாலியல் குற்றச் சம்பவங்கள் அங்கு பதிவான நிலையில், தற்போது 5ஆவதாக பகீர் குற்றச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அங்குள்ள மகாநகர் என்ற பகுதியில் பெண் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக அங்குள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

  சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு மருந்து தருவதாகக் கூறி, மருத்துவரும் வார்டுபாய்யும் மயக்க மருந்து தந்துள்ளனர். பெண் மயக்கமடைந்த நிலையில், இருவரும் சேர்ந்து அப்பெண்ணை மருத்துவமனையில் வைத்தே கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மயக்கம் தெளிந்த பின்னர் பெண்ணுக்கு உண்மை தெரிய வரவே, காவல்துறையிடம் சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி புகார் அளித்துள்ளார்.

  இதையும் படிங்க: பிட் பேப்ரை லவ் வெட்டர் என நினைத்து அண்ணனிடம் புகார் அளித்த மாணவி.. 12 வயது சிறுவன் அடித்தே கொன்ற கும்பல்!

  அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அரசு மருத்துவர் மற்றும் வார்டு பாய்யை கைது செய்துள்ளது. உடல் நலத்தை காக்க மருத்துவமனைக்கு சென்ற பெண்ணை மருத்துவரே சதித்திட்டம் தீட்டி பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் குவாலியரிலும் 40 வயது பெண்ணை மருத்துவரும் அவரது உதவியாளரும் கிளினிக்கில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக இதே போல் கைது செய்யப்பட்டனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Crime News, Doctor, Uttar pradesh