Home /News /national /

ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் - குவியும் பாராட்டு!

ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் - குவியும் பாராட்டு!

கல்வி வழங்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

கல்வி வழங்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

உத்திரபிரதேச மாநில காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வரும் ஒரு காவல் அதிகாரி தனது கடமையை சிறப்பாக செய்வது மட்டுமல்லாமல், வறுமையில் வாடும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செய்யும் ஒரு இலவச சேவை, நாடு முழுவதும் உள்ள மக்களை நெகிழ செய்து உள்ளது.

மேலும் படிக்கவும் ...
    உத்திரபிரதேச மாநில காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வரும் ஒரு காவல் அதிகாரி தனது கடமையை சிறப்பாக செய்வது மட்டுமல்லாமல், வறுமையில் வாடும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செய்யும் ஒரு இலவச சேவை, நாடு முழுவதும் உள்ள மக்களை நெகிழ செய்து உள்ளது.

    கோவில் நகரமான அயோத்தியில் பணியாற்றும் போலீஸ் அதிகாரியான ரஞ்சித் யாதவ், மிக குறைந்த வருமானம் கொண்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சேர்ந்த உள்ளூர் பகுதி குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்ய "இலவச கல்வி"-யை வழங்குகிறார்.

    ரஞ்சித் யாதவ் வழங்கும் இந்த இலவச கல்வியை விரும்பி பயிலும் குழந்தைகள், ஒருவேளை படிக்காவிட்டால் இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பார்கள் தெரியுமா.? பிச்சை எடுத்து கொண்டிருப்பார்கள். இது பொய் அல்ல, நிஜம் தான். ஏனென்றால் இலவச கல்வி பயிலும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர்கள் பிச்சைகாரர்கள். ஆம், பிச்சைக்காரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி சொல்லி கொடுக்கும் உன்னத பணியை தான் மேற்கொண்டு வருகிறார் எஸ்.ஐ ரஞ்சித் யாதவ்.

     

     



     

    ரஞ்சித் யாதவிடம் பாடம் கற்கும் குழந்தை ஒன்று" இங்கு படிக்கும் போது நாங்கள் நன்றாக உணர்கிறோம், மகிழ்ச்சி அடைகிறோம் அதனால் இப்போது, நாங்கள் இங்கு அடிக்கடி வருகிறோம். தவிர நாங்கள் மேற்கொண்டு படித்து பள்ளிக்கு செல்ல விரும்புகிறோம்" என செய்தி நிறுவனம் ஒன்று எடுத்த பேட்டியில் கூறி இருக்கிறது.

    காவலர் ஆசிரியராக மாறியதற்கான காரணம்:

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ரஞ்சித் யாதவ் இந்த குழந்தைகளுக்கு மரத்தடியின் கீழ் வைத்து தான் வகுப்பெடுத்து வருகிறார். இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பிச்சை எடுப்பதை பார்த்து விட்டு பல மாதங்களுக்கு முன்பு இலவச வகுப்புகளை தொடங்கி உள்ளார். இதுபற்றி ANI-யிடம் பேசிய காவலர் ரஞ்சித் யாதவ், தற்போது என்னிடம் கல்வி கற்க வரும் குழந்தைகளின் பெற்றோர் பிச்சை எடுப்பதை நான் அடிக்கடி கவனித்தேன்.

     

     



     

     

    இதனை தொடர்ந்து அவர்களிடம் சென்று பேசிய போது 'எங்களின் நிலை தான் இப்படி ஆகி விட்டது. ஆனால் எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க விரும்புகிறோம். ஆனால் முடியவில்லை' என்று மிகவும் வருந்தினர். இதனை தொடர்ந்தே அவர்களது குழந்தைகளுக்கு என்னால் முடிந்த இலவச கல்வியை கொடுக்க ஏற்பாடு செய்து "எனது சொந்த பள்ளி"-யை தொடங்கினேன். கடந்த பல மாதங்களாக எனக்கு விடுமுறை அலல்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்து வருகிறேன் என்று கூறி இருக்கிறார்.

    50-க்கும் மேற்பட்ட குழந்தைகள்:

    ரஞ்சித் யாதவ் தன்னிடம் கல்வி கற்க வரும் ஏழை குழந்தைகளுக்கு அன்புடனும், அக்கறையுடனும் பாடம் கற்பிக்கிறார். இவரின் கற்பித்தல் முறையை கண்டு உற்சாகமாக குழந்தைகள் இவரை தேடி படிக்கச் வருகிறார்கள். மரத்தடியில் வழங்கப்படும் இந்த திறந்தவெளி கல்வியை விடாமுயற்சியுடன் கற்கிறார்கள் குழந்தைகள்.

    ALSO READ | 2014-ல் இருந்து ஊட்டச்சத்துக் குறைபாடு குறைந்துள்ளது- அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி
     இன்ஸ்பெக்டர் ரஞ்சித் யாதவ் ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்று கொடுப்பதோடு மட்டுமின்றி அவர்களுக்கு தேவையான ஸ்டேஷனரி பொருட்களையும் புத்தகங்களையும் தனது சொந்த செலவில் வாங்கி கொடுக்கிறார். சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகள் தற்போது இவரிடம் இலவசமாக படித்து வருகிறார்கள். ரஞ்சித் யாதவின் உன்னதமான இந்த கல்வி சேவை மக்கள் மத்தியில் பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Uttar pradesh

    அடுத்த செய்தி