உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து, யோகி ஆதித்தயநாத் மீண்டும் முதலமைச்சரானார். இந்நிலையில், மாநில வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து யோகி ஆதித்யநாத் நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்தாவது, "பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் பேரில் உத்தரப் பிரதேச கடந்த ஆறு ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் சிறந்த வளர்ச்சியை கண்டு வருகிறது. இரண்டு ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று சவாலை நாம் கடந்து தற்போது மீண்டு வருகிறோம். 15 கோடி மக்கள் தொகை உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தில் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருவது மிக சவாலான காரியம்.
பிரதமர் மோடி இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற கனவு கண்டுள்ள நிலையில், இதில் உத்தரப் பிரதேசத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது. எனவே, மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சிக்காக துறை ரீதியாக பல திட்டங்கள் வகுக்கப்பட்டு பல நிபுணர்களை உள்ளடக்கிய குழுக்களை மாநில அரசு அமைத்துள்ளது. பல நகரங்களுக்கு சென்று முதலீடுகள் தொடர்பான கருத்தரங்குகளை பங்கேற்று வருகிறோம்.
விரைவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் மாநிலத்தின் தற்போதைய ஜிடிபியை விட அதிக அளவிலான முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி டாலாராக உயர்த்த அரசு முனைப்பு கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில், 13-14 சதவீத ஜிடிபி வளர்ச்சியை உத்தரப் பிரதேசம் கொண்டுள்ளது. பல வகையான வளங்களை உள்ளடக்கிய மாநிலம் உத்தரப் பிரதேசம். எனவே மாநிலத்தின் மனித வள ஆற்றலைக் கொண்டு வேளாண்மை, சிறுகுறு தொழில் என பல துறைகளில் சிறந்த வளர்ச்சியை எட்ட முடியும் என நம்புகிறோம்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Economy, Uttar pradesh, Yogi adityanath