உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்யவேண்டும்.. ராமர் கோவில் கட்டும் பணியை கொடுக்கலாம் - மாயாவதி

யோகி ஆதித்யநாத்

பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ராமர் கோயில் கட்டும் பணியை மேற்கொள்ளலாம்’ என்று கடுமையாக சாடியுள்ளார்.

  • Share this:
    முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கோரக்நாத் மடத்துக்கு போகலாம். அந்த கோவில் பிடிக்கவில்லையென்றால் ராமர் கோயில் கட்டும் பணி செய்யலாம் என யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஆதங்கங்களுக்கு இடையில், உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் பகுதியில் மற்றொரு பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் எதிர்கட்சிகள், மகளிர் அமைப்புகள் மற்றும் பலர் அறிக்கை விடுத்து வருகின்றனர். பல அரசியல் கட்சித் தலைவர்கள், யோகி ஆதித்யநாத் அரசு மீது கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.

    இதை முன்னிட்டு, உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ’உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ராமர் கோயில் கட்டும் பணியை மேற்கொள்ளலாம்’ என்று கடுமையாக சாடியுள்ளார்.
    Published by:Gunavathy
    First published: