முகப்பு /செய்தி /இந்தியா / Exclusive: ''முஸ்லீம்கள் குறித்த மோகன் பகவத்தின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்'' - யோகி ஆதித்யநாத் அதிரடி

Exclusive: ''முஸ்லீம்கள் குறித்த மோகன் பகவத்தின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்'' - யோகி ஆதித்யநாத் அதிரடி

மோகன் பகவத் - யோகி ஆதித்யநாத்

மோகன் பகவத் - யோகி ஆதித்யநாத்

''இந்து பெண்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லீம் பெண்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் ''

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நெட்வொர்க் குழும முதன்மை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அதில் மாநில வளர்ச்சி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விரிவாக  பேசினார். அப்போது பேசிய அவர், ''உலக முதலீட்டாளர் மாநாடு விரைவில் நடைபெறவுள்ள நிலையில் மற்ற மாநிலங்களின் ஜிடிபியை விட அதிக அளவிலான முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.

ராமசரித்திரமனாஸ் சர்ச்சை குறித்து பேசிய அவர், ''உத்தரபிரதேசத்தில் நாங்கள் பெரிய வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்திருக்கிறோம். வளர்ச்சி குறித்து சிந்திக்காமல் பிரிவினை குறித்து சிந்திக்கும் சிலர் தவறான கருத்துக்களை கூறி வருகிறார்கள். முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களில் இருந்து மக்களை திசை திருப்ப இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ராமசரித்திரமனாஸ் ஒவ்வொரு வீட்டிலும் மதிப்புகுரியதாகவும் போற்றுதலுக்குரியதாகவும் பார்க்கப்படுகிறது. அதன் முக்கியத்துவம் தெரியாதவர்கள் இது போன்ற கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்'' என்று பதிலளித்தார்.

மேலும்  பாரத் ஜோடா யாத்திரை, பதான் பட சர்ச்சைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து  அவர் பேசுகையில், ''ராகுல் காந்தி எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டால் அவரது கட்சி வளர வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவர் எதிர்மறை சிந்தனைகளை கைவிடவில்லை. பாரத் ஜோடா யாத்திரை எந்த பலனையும் அவருக்கு தராது என்றவர், “ நாங்கள் எல்லா கலைஞர்களையும் மதிக்கிறோம். எங்களுக்கென திரைப்பட கொள்கைகள் உள்ளன. நிறைய படங்கள் உத்தரப்பிரதேசத்தில் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் மக்களின் உணர்வுகளை பாதிக்குமாறு காட்சிகளை வைக்காமல் இயக்குநர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்.” என்று தெரிவித்தார்.

மேலும்  ‘இந்தியா எப்போதுமே இந்துஸ்தான் தான். அதே சமயத்தில், இந்தியாவில் முஸ்லிம்களும் அச்சமின்றி வாழலாம். ஆனால் அவர்கள் தேவையில்லாமல் தங்கள் வரலாற்று பெருமையை பேசக்கூடாது’ என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்த, கருத்தை சுட்டிக்காட்டி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பட்டபோது, “முஸ்லீம்கள் குறித்த மோகன் பகவத்தின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன். உத்தரப்பிரதேசத்தில் எல்லா மத திருவிழாக்களும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்து பெண்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லீம் பெண்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். எங்களுடைய எல்லா திட்டங்களும் முஸ்லீம்கள் உட்பட அனைவருக்கும் பலனளிக்கக் கூடியதாக இருக்கின்றன. யாரையும் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுப்பதில்லை. இது சமாதானப்படுத்துவதற்காக இல்லை.” என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டமை குறித்த கேள்விக்கு பதிலளித்து யோகி ஆதித்யநாத் பேசுகையில், “ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் நல்ல மற்றும் கெட்ட பக்கங்களைக் கொண்டிருக்கும். முலாயம் சிங் யாதவ் அவரது மக்கள் சேவைக்காக பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது. இது சமாஜ்வாதி கட்சி பிஜேபிக்கு நன்றியைக் காட்ட ஓர் சிறந்த வாய்ப்பு. ஆனால் முலாயம் சிங் யாதவிற்கு சமாஜ்வாதி கட்சி தனது மரியாதையை அளிக்கவில்லை''  இவ்வாறு அவர் பேசினார்.

First published:

Tags: Yogi adityanath