ஹோம் /நியூஸ் /இந்தியா /

தமிழும் சமஸ்கிருதமும் சிவபெருமானின் வாயில் இருந்து வந்த மொழிகள் : யோகி ஆதித்தியநாத்

தமிழும் சமஸ்கிருதமும் சிவபெருமானின் வாயில் இருந்து வந்த மொழிகள் : யோகி ஆதித்தியநாத்

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சிவபெருமான் வாயிலிருந்து தமிழும் சமஸ்கிருதமும் வந்த மொழிகள் என உத்தரப்பிரேதச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

  தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, இணையமைச்சர் எல்.முருகன், உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளர் இளையராஜா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  இதையும் படிங்க: தமிழ்நாடு சிவமயமானது ..காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

  இந்த நிகழ்ச்சியில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வணக்கம் எனக்கூறி உரையை தொடங்கினார். இந்தியாவில் உள்ள மொழிகள் நம் நாட்டில் உள்ள கலாச்சாரத்தை பிரதிபளிக்கும் வண்ணமே அமைந்திருப்பதாக தெரிவித்தார். தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி என்றும் ஒரு பழங்கதை உள்ளது, சிவபெருமானின் வாயில் இருந்து இரண்டு மொழிகள் வந்தன ஒன்று தமிழ் மற்றொன்று சமஸ்கிருதம் அத்தகைய பழமை வாய்ந்தது தமிழ் மொழி என காசி தமிழ் சங்கமம் விழாவில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Sanskrit, Tamil language, Uttar pradesh, Yogi adityanath