உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள கொத்வாலி என்ற பகுதியில் ஒரு பெண்ணுக்கு ஜனவரி 19ஆம் தேதி திருமண விழா நடைபெற இருந்தது. மணப்பெண் துர்காப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அவரை அருகே உள்ள பபீனா சாரா கிராமத்தில் வசிக்கும் நபருக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
திருமணத்திற்கு தடபுடலாக ஏற்பாடு செய்து அதற்கான சடங்குகள் நடைபெற்றன. முதல் நாள் மாலையில் மாப்பிள்ளை குதிரையில் ஏற்றி திருமண ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து இரவும் பல சடங்குகள் நடத்தப்பட்டது. இந்நிலையில், மணப்பெண்ணின் சகோதரருக்கு மாப்பிள்ளை மீது சந்தேகம் வந்துள்ளது. மாப்பிள்ளை படித்தவரா, நல்ல வேலையில் உள்ளவரா அல்லது நம்மிடம் பொய் சொல்லி திருமணம் செய்கிறார்களா என யோசித்துள்ளார். அதை தீர்த்துக்கொள்ள புதிய யுக்தியை கையாண்டார்.
அன்றைய இரவு மணமக்களுக்கு புரோகிதர் தர்வாச்சார் என்ற சடங்கை செய்து வைத்துக்கொண்டிருந்தார். அந்த புரோகிதரிடம் பெண்ணின் சகோதரர் பல ரூ.10 நோட்டுகளையும், நாயணங்களையும் கொடுத்து இதை மணமகனிடம் கொடுத்து எண்ணிகக் காட்ட சொல்லுங்கள் என்றுள்ளார். புரோகிதரும் பணத்தை மணமகனிடம் கொடுத்தார். அப்போது தான் உண்மை அம்பலமானது. கொடுத்த பணத்தை மணமகன் சரிவர எண்ண முடியாமல் திணறியுள்ளார்.
இதை பார்த்து மணப்பெண்ணின் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். தான் படித்த பையன் என்று மணமகன் பொய் கூறியது குடும்பத்தாருக்கு உறுதியானது. இந்த விஷயத்தை அறிந்த மணப்பெண்ணும், படிப்பறிவு இல்லாத நபரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார். இதை கேட்டு மணமகனின் வீட்டார் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: வறுமையில் குடும்பம்.. அரசுப் பள்ளியில் படிப்பு.. தடைகளை தகர்த்து 25 வயதில் நீதிபதியான பட்டியலின பெண்..!
தொடர்ந்து அப்பகுதியின் காவல் ஆய்வாளர் கம்தா பிரசாத் அங்கு சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை. மணமகனின் வீட்டார் தான் உண்மையை மறைத்துவிட்டனர். எனவே,பெண் இந்த நபரை திருமணம் செய்து கொள்ளமாட்டார் என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.