• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • யார் மீதும் காரை மோதி நசுக்க நாம் அரசியலுக்கு வரவில்லை: மத்திய அமைச்சர் மகனை விமர்சித்த உ.பி. பாஜக தலைவர்

யார் மீதும் காரை மோதி நசுக்க நாம் அரசியலுக்கு வரவில்லை: மத்திய அமைச்சர் மகனை விமர்சித்த உ.பி. பாஜக தலைவர்

ஸ்வதந்திர தேவ் சிங்

ஸ்வதந்திர தேவ் சிங்

ஆஷிஷ் மிஸ்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பாஜகவின் மாநில தலைவரே  ஆஷிஷ் மிஸ்ராவை மறைமுகமாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

  • Share this:
    லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலையில் குற்றம் சாட்டப்படும் ம்த்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், யார் மீதும்  ஃபார்ச்சூனர் கொண்டு மோதி நசுக்குவதற்காக நாம் அரசியலுக்கு வரவில்லை என்று உத்தரப் பிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் கூறியுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்ற கட்சியின் சிறுபான்மை முன்னணியின் மாநில செயற்குழுவின் தொடக்க நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர்,  டீ விற்றவரும், ஏழை குடும்பத்தில் பிறந்தவரும் பிரதமராகவும், முதலமைச்சராகவும் ஆகியுள்ளனர் என்று பிரதமர்  நரேந்திர மோடியையும் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும் புகழுந்து பேசினார்.

    மேலும்,  “ஒருவரின் நடத்தையின் அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அரசியல் என்பது உங்கள் சமுதாயத்திற்கு, உங்கள் தேசத்திற்கு சேவை செய்வதாகும். இதில் சாதி மற்றும் மதம் சம்பந்தப்படவில்லை.அரசியலில் தலைவராக இருப்பதால் கொள்ளையடிக்கலாம் என்று அர்த்தமில்லை. யார் மீது ஃபார்ச்சுனர் (கார்) கொண்டு மோதி நசுக்குவதற்காக நாம் அரசியலுக்கு வரவில்லை. ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக நாம் இந்த கட்சியில் இருக்கிறோம். அரசியல் என்பது பகுதி நேர வேலை அல்ல” என்றும் அவர் கூறினார்.

    லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பாஜகவின் மாநில தலைவரே  ஆஷிஷ் மிஸ்ராவை மறைமுகமாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: எல்லை விவகாரத்தில் உடன்பட மறுக்கும் சீனா: 13வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி!


    உத்தரப் பிரதேசத்தின்  லகிம்பூர் பகுதியில் விவசாயிகள் மீது கார் கொண்டு மோதப்பட்ட சம்பவம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.  விவசாயிகள் மீது காரை ஏற்றியதாக  மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பான வழக்கின் விசாரனைக்கு கடந்த சனிக்கிழமையன்று  ஆஷிஷ் மிஸ்ரா லகிம்பூர் குற்றப்பிரிவு அலுவலகத்தில்  ஆஜரானார்.  வழக்கின் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்று கூறி போலீசார் அவரை கைது செய்தனர். .சம்பவம் நடந்த நேரத்தில் அஜய் மிஷ்ரா, சம்பவ இடத்தில் இருந்து 4 முதல் 5 கிமீ தொலைவில் உள்ள மல்யுத்த நிகழ்ச்சி ஒன்றில் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

    மேலும் படிக்க: மருந்து உற்பத்தி நிறுவனத்தில் நடத்திய சோதனையில் ரூ.142 கோடி பறிமுதல்: ரூ.550 கோடியை கணக்கில் காட்டாததும் கண்டுபிடிப்பு!


    ஆனால் அந்த மல்யுத்த நிகழ்ச்சியில் பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தின்படி, அஜய் மிஸ்ரா, மதியம் 2 முதல் 4 மணி வரை அந்த நிகழ்ச்சி நடந்த இடத்தில் இல்லை என கூறியிருக்கின்றனர்.மேலும் அஜய் மிஸ்ராவின் டவர் இருப்பிடமும், சம்பவம் நடந்த இடத்தை தான் காட்டியிருக்கிறது. இந்த சம்பவங்களின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதை படிக்க: காஷ்மீரில் தீவிரவாத அனுதாபிகள் 900 பேர் கைது: சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தொடர்ந்து அரசு அதிரடி!


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: