முகப்பு /செய்தி /இந்தியா / மதுரா உள்ளிட்ட 7 தெய்வீகத் தலங்களில் மது, இறைச்சிக்குத் தடை: யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு

மதுரா உள்ளிட்ட 7 தெய்வீகத் தலங்களில் மது, இறைச்சிக்குத் தடை: யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு

யோகி ஆதித்யநாத்.

யோகி ஆதித்யநாத்.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மற்ரும் 7 தெய்வீகத் தலங்களில் மது, மாமிசம் ஆகியவற்றுக்குத் தடை விதித்து உத்தரவிட்டார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மற்ரும் 7 தெய்வீகத் தலங்களில் மது, மாமிசம் ஆகியவற்றுக்குத் தடை விதித்து உத்தரவிட்டார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

கிருஷ்ணன் ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் மதுரா வந்தார். இங்கு ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததாக நம்பப்படும் தலத்தில் வழிபாடு நடத்தினார்.

பிறகு அங்குள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசியவர் மதுராவில் இனி மது, மாமிசம் விற்பனைக்கு தடை விதிப்பதாக அறிவித்தார்.

அவர் பேசும்போது, “கடந்த 2017 இல் இங்குள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிருந்தாவன் மற்றும் மதுரா மாநகராட்சிகள் இணைக்கப்பட்டன.

Also Read: கொரோனா: நாங்கள் பொறுப்பல்ல, உங்கள் ரிஸ்க்தான்: பெற்றோர்களிடம் கைவிரிக்கும் பள்ளிகள்

இதையடுத்து, இங்குள்ள ஏழு தெய்வீகத்தலங்கள் புனிதத்தலங்களாகவும் அறிவிக்கப்பட்டன. இப்போது அந்த ஏழு தலங்களிலும் மது, மாமிசம் விற்பனைக்கு தடை விதிக்க பொதுமக்கள் கோரி வருகின்றனர்.

இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அதன் விற்பனைக்கு இந்த ஏழு ஊர்களிலும் தடை விதிக்கப்படுகிறது. இனி இவ்விரண்டையும் இந்த ஏழு ஊர்களிலும் விற்பனை செயவர்கள் மீது நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

இந்த ஏழு ஊர்களின் பட்டியலில் மதுரா மாவட்டத்தின் மதுரா, பிருந்தாவன், கோவர்தன், நந்த்காவ்ன், பர்ஸானா, கோலம், மாஹாவன் மற்றும் பல்தேவ் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த ஊர்களில் மது மற்றும் மாமிச விற்பனைக்குத் தடை விதித்துள்ளதால் இந்த விற்பனையில் இருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று யோகி ஆதித்யநாத் வாக்குறுதி அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு முன்பு முதல்வர்களாக இருந்த எவரும் கிருஷணன் ஜெயந்தி பண்டிகைக்காக மதுரா வந்ததில்லை என்ற யோகி ஆதித்யநாத் மதுராவில் அனைத்து நிகழ்ச்சிகளூம் தடையின்றி நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றார்.

First published:

Tags: Uttar pradesh, Yogi adityanath