Home /News /national /

ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேக் இலவசம்.. அசத்தும் பேக்கரி.. பாராட்டிய ஐஏஎஸ் அதிகாரி

ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேக் இலவசம்.. அசத்தும் பேக்கரி.. பாராட்டிய ஐஏஎஸ் அதிகாரி

ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேக் இலவசம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேக் இலவசம்

Trending : ஐஏஎஸ் அதிகாரி அவானிஷ் சரண் என்பவர் ட்விட்டரில் இந்த செய்தியை பகிர்ந்து, இந்த கடையின் உரிமையாளருக்கு அன்பும் மரியாதையும் என பாராட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பேக்கரி உரிமையாளர் ஒருவர் 14 வயது வரை உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது பேக்கரியில் கேக் இலவசம் என்று அறிவித்தது சமூக வலைத்தளத்தில் பாராட்டுகளை குவித்து வருகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலத்தின் தேவாரியா என்ற பகுதியில் உள்ள கனக் ஸ்வீட்ஸ் என்ற பேக்கரி கடை உள்ளது. இந்த கடையில் உள்ள கேக்குகள், ஸ்வீட்டுகள் தரும் தித்திப்பை விட, இந்த கடையின் உரிமையாளர் பரந்த மனதுடன் கடையில் ஒட்டியிருக்கும் அறிவிப்பு ஸ்டிக்கர் தான் கூடுதல் இனிப்பை தரும் விதமாக உள்ளது. ஆம், இந்த கடையின் உரிமையாளர், தனது அறிவிப்பில், இலவசம்.. இலவசம்.. தாய், தந்தை இல்லாத 14 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேக்குகள் இங்கு இலவசமாக தரப்படும் என எழுதி அறிவித்துள்ளார்.


    இந்த அறிவிப்பு புகைப்படத்தை ஐஏஎஸ் அதிகாரி அவானிஷ் சரண் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்து, இந்த கடையின் உரிமையாளருக்கு அன்பும் மரியாதையும் என பாராட்டியுள்ளார். இந்த பதிவுக்கு இதுவரை 25,000க்கும் மேற்பட்ட லைக்குகள், 2000க்கும் மேற்பட்ட ரீட்வீட்டுகள் கிடைத்துள்ளன.

    இதையும் படிங்க: போலீசாரிடம் சிக்காமல் இருக்க கரடி பொம்மைக்குள் ஒளிந்து கொண்ட திருடன்.. அடுத்து நடந்தது?

    மேலும், இது ஒரு மிகச்சிறந்த முன்னெடுப்பு, மனித நேயம் மிக்க நபர் இந்த கடையின் உரிமையாளர், இது பலருக்கும் முன்னுதாரனமாக இருக்கும் என உரிமையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    ஐஏஎஸ் அவானிஷ் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் தனித்துவமான நிகழ்வுகள், செய்திகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதன் காரணமாக இவரின் ட்விட்டர் பதிவுகளை கவனித்து பாலோ செய்வதற்கென்ற பெரும் கூட்டம் சமூக வலைத்தளத்தில் உள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Uttar pradesh, Viral News

    அடுத்த செய்தி