ஹோம் /நியூஸ் /இந்தியா /

பணம் திருடு போனதாக போலி புகார் அளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி.. சக போலீசாரை கண்காணிக்க பலே திட்டம்!

பணம் திருடு போனதாக போலி புகார் அளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி.. சக போலீசாரை கண்காணிக்க பலே திட்டம்!

உத்தரப் பிரதேச ஐபிஎஸ் அதிகாரி சாரு நிகம்

உத்தரப் பிரதேச ஐபிஎஸ் அதிகாரி சாரு நிகம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உள்ளூர் காவலர்கள் முறையாக வேலை செய்கிறார்களா என்பதை கண்காணிக்க மஃப்டியில் வந்து பரிசோதித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  அரசுத்துறையில் பணிகள் சரியாக நடக்கிறதா என கண்காணிக்க உயர் அதிகாரிகள் அவ்வப்போது மாறுவேடத்தில் வந்து கண்காணிப்பது வழக்கம். அவ்வாறு உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உள்ளூர் காவலர்கள் முறையாக வேலை செய்கிறார்களா என்பதை கண்காணிக்க மஃப்டியில் வந்து பரிசோதித்துள்ளார்.

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அவுரையா மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் சாரு நிகம். ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடந்த நவம்பர் 3ஆம் தேதி அன்று அங்குள்ள கிராமப் பகுதியில் உள்ள ஆள் அரவமற்ற சாலைக்கு சென்றார். காவலர் சீருடையில் அல்லாது அவர் சுடிதார் அணிந்து, துப்பட்டாவால் முகத்தை முழுவதும் மூடி, முகக்கவசம், கருப்பு கண்ணாடி என்ற தோற்றத்தில் அங்கு வந்தார். பின்னர் அங்கிருந்து, காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் அவசர எண்ணுக்கு கால் செய்து, தனது பெயர் சரிதா சவுஹான், நான் சாலையில் சென்றுகொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய இரு நபர்கள் என்னை வழிமறித்து பணத்தை வழிபறி செய்து திருடி சென்றனர் என பதற்றத்துடன் தெரிவித்தார்.

  இதை கேட்டதும் கட்டுப்பாட்டு அறையில் இருந்த காவலர்கள் அவரிடம் பயப்பட வேண்டாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கு 5 நிமிடத்தில் காவலர்கள் வருவார்கள் என்றனர். இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு 3 காவலர்கள் வந்து அவரிடம் புகார் என்ன, விவரங்களை கூறுங்கள் என்றனர்.

  இதையும் படிங்க: நண்பனின் காதலியுடன் நெருக்கமாக பழக்கம்... கல்லூரி மாணவர் மீது சரமாரி தாக்குதல்

  அப்போது தான் அந்த பெண்மணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாரு நிகம் என்பது அங்கிருந்த உள்ளூர் காவலர்களுக்கு தெரியவந்தது. இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் புகார் தந்தால் காவலர்கள் எவ்வளவு வேகமாக செயல்படுகிறார்கள், உடனடியாக தீர்வு கிடைக்கிறதா என்பதை கண்காணிக்கவே இந்த செயலில் ஈடுபட்டதாக சாரு நிகம் ஐபிஎஸ் தெரிவித்தார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: UP police, Uttar pradesh, Viral Video