உத்தரப்பிரதேசத்தில் 24 மாவட்டங்கள் தொற்றில்லாதவையாக அறிவிப்பு!

Yogi adityanath

11 மாவட்டங்களில் தலா ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

  • Share this:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 24 மாவட்டங்கள் தொற்றில்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று அங்கு 18 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அடிக்கடி நடக்கும் குற்ற சம்பவங்களுக்காக பெயர் போன அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கடந்த சில வாரங்களாகவே குறைந்து வந்தது. தற்போது இரட்டை இலக்க அளவிலேயே புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை இருந்து வருகிறது.

வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 3) உத்தரப்பிரதேச மாநிலத்தின் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை 18 ஆக மட்டுமே இருந்தது. ( 11 மாவட்டங்களில்) ஒருவர் கூட தொற்றால் உயிரிழக்கவில்லை. 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 239 பேர் ஆக மட்டுமே உள்ளது.

இதனிடையே புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படாமல் இருந்து வந்த 24 மாவட்டங்கள் தொற்றில்லாதவையாக மாநில சுகாதாரத்துறையால அறிவிக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் தலா ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்கள். மொத்தம் உள்ள 75 மாவட்டங்களில் லக்னோ, கவுதம் புத் நகர், ரேபரேலி, பிரயாக்ராஜ் மற்றும் மெயின்புரி ஆகிய 5 மாவட்டங்களில் மட்டுமே சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10க்கும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கிருஷ்ண ஜெயந்தியன்று விரதம் இருந்ததற்காக மாணவர்களை அடித்து திட்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்!

அலிகார், அமேதி, அம்ரோஹா, அயோத்தி, காஸிபூர், முசாஃபர் நகர், ஹத்ராஸ், பிலிபித், சீதாபூர் உள்ளிட்ட 24 மாவட்டங்கள் தற்போது தொற்றில்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 17,09,401 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16,86,308 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22,854 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத்துறை கூடுதல் செயலர் அமித் மோகன் பிரசாத் கூறுகையில், பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், அரசு தனது கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை சமரசமின்றி மேற்கொண்டு வருகிறது. பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதுடன் பரிசோதனை எண்ணிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது என்றார்.

Also Read:  பெண் போல பேசி சிறுமிகளை சமூக வலைத்தளத்தில் இப்படியும் ஏமாத்துறாங்க.. யுடியூப் மூலம் மோசடி பாடம்!

கேரளாவில் 29,322 பேர்:

இதனிடையே நாட்டிலேயே அதிக பாதிப்பை கொண்ட மாநிலமாக, கேரளா இருந்து வருகிறது. அங்கு நேற்று (செப் 3) மட்டும் 29,322 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 131 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 2.46 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாகவே 45,352 பேருக்கு தான் பாதிப்பு உறுதியானது. இதில் முக்கால்வாசி பங்கை கேரளா கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: