உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வு புகார் அளிப்பதற்காக காவல் நிலையம் சென்ற 13 வயது பெண் போலீசாரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். சந்தன், ராஜ்பன், ஹரிசங்கர் மற்றும் மகேந்திர சௌராசியா ஆகிய நான்கு பேரும் கடந்த ஏப்ரல் 22ம் தேதி சிறுமியை போபால் நகருக்கு அழைத்து சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
பின்னர் ஏப்ரல் 26ம் தேதி சிறுமியை அவளது சொந்த ஊரில் உள்ள காவல் நிலையம் முன்பாக இறக்கிவிட்டு சென்றுள்ளனர். சிறுமி உடனடியாக அவரது பெண் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அடுத்த நாள் காலை சிறுமி தனது பெண் உறவினருடன் புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுள்ளார்.
அங்கு பணியில் இருந்த காவலர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் , சிறுமியின் பெண் உறவினர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேசத்தில் பசுக்கொலை சந்தேகத்தின் பேரில் பழங்குடியினர் இருவர் அடித்துக் கொலை
தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட போலீஸார் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். டிஐஜி அளவிலான அதிகாரி இந்த வழக்கை விசாரித்து 24 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.