உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள தொழில்சாலையில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். ஹபூர் மாவட்டத்தில் உள்ள தோலானா பகுதியில் உள்ள ரசாயன தொழில்சாலையில் நேற்று மாலை பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக சுற்றி இருந்த பகுதிகளிலும் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மூன்று மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் படுகாயம் அடைந்த நிலையில் இவர்கள் சப்தார்ஜங்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் கூறுகையில், 'இந்த தொழில்சாலைக்கு எலக்ட்ரானிக் பொருள்களை தயாரிக்கத்தான் உரிமை வழங்கப்பட்டது. ஆனால், இது ரசாயன தொழில்சாலையாக இயங்கி வரும் நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். சம்பவ இடத்திற்கு தடயவியல் துறை நிபுணர்கள் சென்று பார்வையிட்டு மாதிரிகளை எடுத்தனர். விபத்தில் சிக்கியவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது' என்றார்.
இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் தனது ட்விட்டர் பதிவில், 'உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் நடைபெற்ற விபத்தில் பலர் உயிரிழந்தது கவலை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி விரும்புகிறேன்' என்றார்.
இதையும் படிங்க:
நாட்டின் முதல் ஹெட்ரோலோகஸ் கோவிட் தடுப்பூசி - கோர்பேவாக்ஸ் பூஸ்டருக்கு அனுமதி
பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் பதிவில், 'இந்த விபத்து பெரும் வேதனை தருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மாநில அரசுக்கு தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது' என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.