10-ம் வகுப்பு மாணவனை வகுப்புத் தோழனே சுட்டுக்கொலை: உ.பி.யில் பயங்கரம்

உ.பி. பள்ளி.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவனை வகுப்புத் தோழனே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவனை வகுப்புத் தோழனே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  புலந்த்ஷெஹர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்பறையில் இரு மாணவர்களுக்கு இடையே இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து வகுப்பு ஆசிரியர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்து இருவரையும் அமர வைத்துள்ளார்.

  ஆனால் இதில் ஒரு மாணவன் தனக்கு பிடித்த இடம் கிடைக்காததால் பயங்கர ஆத்திரமும் கோபமும் அடைந்தான். அன்றைய தினத்தை விடுத்து மறுநாள் வகுப்பறைக்குத் துப்பாக்கியுடன் வந்து தன்னுடன் தகராறில் ஈடுபட்ட மாணவனின் நெற்றியில் சுட்டான்.

  சுடப்பட்ட மாணவன் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானான். ஆனால் ஆத்திரம் அடங்காத இந்த மாணவனோ மீண்டும் மார்பில் ஒருமுறையும் வயிற்றில் ஒருமுறையும் சுட்டான்.

  பிறகு தப்பியோட முயற்சித்த கொலையாளி மாணவன் வானத்தை நோக்கிச் சுட்டுக் கொண்டே ஓடியிருக்கிறான். ஆனால் ஆசிரியர்கள் அவனை எப்படியோ சுற்றி வளைத்து பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.

  சம்பவத்தைப் பார்த்த மற்ற மாணவர்கள் அலறினர், சிலர் பள்ளியை விட்டு ஓடி விட்டனர்.

  இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

  கொலை செய்த மாணவன் ராணுவத்தில் இருந்து ஓய்வில் வீட்டுக்கு வந்த தன் மாமாவின் துப்பாக்கியை எடுத்து வந்து இந்தக் கொலையைச் செய்துள்ளான். அவன் பையில் நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் இருந்தது. இந்த மாணவனின் ஆத்திரம் அவனை திட்டமிடவைத்திருக்கிறது. மாணவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, என்றனர்.

  இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Muthukumar
  First published: