6வது திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சரை தட்டிக்கேட்ட 3வது மனைவிக்கு முத்தலாக்!

முன்னாள் அமைச்சர் மீது 3வது மனைவி புகார்

முன்னாள் அமைச்சரான சவுத்ரி பஷிருக்கு ஏற்கனவே 5 முறை திருமணம் ஆகியிருக்கும் நிலையில் தற்போது 6வது முறையாக ஷைஸ்தா என்ற பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

  • Share this:
விநோதங்களுக்கு பஞ்சமில்லாத உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு விநோத நிகழ்வு அரங்கேறியிருக்கிறது. 6வது முறையாக திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர் மீது முத்தலாக் கொடுக்கப்பட்ட அவருடைய 3வது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைச்சராக இருந்தவர் சவுத்ரி பஷிர். மாயாவதி முதல்வராக இருந்தபோது அவரின் அமைச்சரவையில் பஷிர் அமைச்சராக இருந்தார். பின்னர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

முன்னாள் அமைச்சரான சவுத்ரி பஷிருக்கு ஏற்கனவே 5 முறை திருமணம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பஷிர் தற்போது 6வது முறையாக ஷைஸ்தா என்ற பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக அவருடைய 3வது மனைவியான நக்மாவுக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஜூலை 23ம் தேதியன்று பஷிரை சந்தித்து நக்மா பேசியபோது, பஷிர் அவரை அடித்து உதைத்ததுடன், முத்தலாக் கூறி விவாகரத்து செய்து வீட்டை விட்டு வெளியேற்றியிருக்கிறார்.

Also Read: மார்பை தொட்ட இளைஞருக்கு, இளம் பெண் கொடுத்த ஷாக்!

சவுத்ரி பெண்களை துன்புறுத்துவதை விரும்பும் நபர் என்று நக்மா குற்றம் சாட்டியுள்ளார்.

2012ம் ஆண்டில் சவுத்ரி பஷிருடன் தனக்கு திருமணம் நடைபெற்றது எனவும், திருமணத்துக்கு பிறகு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தான் துன்புறுத்தப்பட்டதாகவும், பல முறை விருப்பம் இல்லாமலே கட்டாயப்படுத்தி பஷிர் தன்னிடம் உடலுறவு கொள்வார் எனவும் நக்மா அடுக்கடுக்கான புகார்களை கூறியிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் மீது 3வது மனைவி புகார்


பஷிர் செய்த கொடுமைகளை விவரித்து சமூக வலைத்தள பக்கத்தில் நக்மா வீடியோ ஒன்றை பதிவேற்றி காவல்துறையினரின் உதவியையும் நாடியிருந்தார்.

Also Read:  டேக்ஸி ஓட்டுநர் மீது இளம்பெண் தாக்குதல்.. தடுக்க வந்தவருக்கும் அடி..

நக்மாவின் புகாரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சவுத்ரி பஷிர் மீது ஆக்ராவின் மந்தோலா காவல்நிலையத்தில், இஸ்லாமிய பெண்கள் திருமண சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆக்ரா எஸ்.பி கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னாள் அமைச்சர் பஷிர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், முன்னதாக ஒரு வழக்கில் 23 நாட்கள் அவர் சிறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
Published by:Arun
First published: