• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • கேரளாவை உலுக்கிய உத்ரா கொலை.. இயற்கைக்கு மாறாக சீண்டிய பாம்புகள் - கணவன் சூரஜ் குற்றவாளி என உறுதியானது எப்படி?

கேரளாவை உலுக்கிய உத்ரா கொலை.. இயற்கைக்கு மாறாக சீண்டிய பாம்புகள் - கணவன் சூரஜ் குற்றவாளி என உறுதியானது எப்படி?

உத்ரா கொலை வழக்கு

உத்ரா கொலை வழக்கு

சூரஜ் வீட்டில் இருக்கும்போது முதல்முறை அவரை வீரியன் வகை பாம்பு கடித்தது. உத்ரா அவரது அம்மா வீட்டில் இருக்கும்போது நாகப்பாம்பு கடித்தது

 • Share this:
  வரதட்சனை கொடுமையால் அரங்கேறிய உத்ராவின் மரணம் கேரளாவையே உலுக்கியது. விஷப்பாம்பை உத்ராவின் மீது ஏவி கணவன் சூரஜ் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சூரஜ் குற்றவாளி என கேரள நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படவுள்ளது.

  உத்ரா கொலை வழக்கு கேரள போலீஸாருக்கு அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. 1000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகள் சாமர்த்தியமாக தப்பிவிடுகின்றனர். மகாராஷ்டிராவில், மத்தியப்பிரதேசத்திலும் நடந்த வழக்குகளை கேஸ் ரெஃப்ரன்ஸூக்காக கேரள போலீஸார் எடுத்துக்கொண்டனர். இதில் பெரும்பான்மையான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல் குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளனர். இதன்காரணமாக இந்த வழக்கை கூடுதல் கவனத்துடன் கையாண்டுள்ளனர்.

  கொல்லம் காவல்துறை கண்காணிப்பார் ஹரி சங்கர் தலைமையிலான போலீஸார் இந்த வழக்கை விசாரித்தனர். இந்த வழக்கு காவல்துறைக்கு எவ்வளவு சவாலானதாக இருந்தது. ருத்ராவின் கணவர்தான் குற்றவாளி என காவல்துறை நீருபிக்க எடுத்த சிரமங்கள் குறித்து அம்மாநில மலையாள மனோரமா ஊடகத்தில்  அவர் விரிவாக பேசியுள்ளார். அதில், “ உத்ரா இரண்டு முறை விஷப்பாம்பினால் கடிப்பட்டதாக எங்களிடம் கூறப்பட்டது. இது வித்தியாசமாகவும் இயற்கைக்கு மாறாகவும் இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணம் தொடர்பாக சந்தேகத்துக்கு இடமான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. சூரஜ் குமார் தன் வீட்டில் ஷர்ப பூஜை செய்ததாக தகவல் கிடைத்தது. உத்ரா இறந்து ஒருவாரம் கழித்து அவரது தந்தை மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்தார். சூரஜ் குமார் வெறித்தனமான நபர் மகளின் மரணத்தில் அவரின் பங்கு இருக்குமோ என சந்தேகமாக இருக்கிறது. கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்திருந்தனர். அவருக்கு இருந்த சந்தேகம் எங்களது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது இதனையடுத்து விசாரணை ஆரம்பித்தோம்.

  உத்ரா - சூரஜ்


  சூரஜ் வீட்டில் இருக்கும்போது முதல்முறை அவரை வீரியன் வகை பாம்பு கடித்தது. உத்ரா அவரது அம்மா வீட்டில் இருக்கும்போது நாகப்பாம்பு கடித்தது. ஆரம்பத்தில் எங்களுக்கு இருந்த சந்தேகம் இந்த இரண்டு வீட்டிலும் நடத்திய விசாரணையில் நீங்கியது. சம்பவம் நடத்த வீட்டில் இருந்த சாட்சிகளை விசாரிக்கும்போது பாம்பின் குணாதிசியங்கள் குறித்தும் படித்தோம். சூரஜ் காவல்நிலையத்தில் கொடுத்த அறிக்கையில் நிறைய வேறுபாடுகள் இருந்தது.

  Also Read: வரதட்சனைக்காக பாம்பை ஏவி மனைவி கொலை: கணவர் குற்றவாளி!

  சூரஜ் வீட்டில் உத்ரா பாம்பினால் கடிப்படும்போது முதல்மாடியில் இருந்துள்ளார். வீரியன் வகை பாம்புகள் பொதுவாக தரைப்பகுதியில், விவசாய நிலங்களில் மட்டுமே காணப்படும். மரங்களில் கூட அவற்றை அரிதாகத்தான் பார்க்கமுடியும். தரையில் செல்லும்போதுதான் எதிராளிகளை வீரியன் பாம்புகள் சீண்டுகின்றன. அதனால் யாராவது பாம்பை கொண்டு சென்று முதல்மாடியில் வீட்டிருக்க வேண்டும் என சந்தேகித்தோம். சூரஜ் அம்மாவிடம் விசாரித்தோம். அவர் முதல்மாடியில் ஜன்னல் அருகே சாய்ந்திருந்த மரக்கிளையை கைக்காட்டினார். அந்த கிளை வழியாகத்தான் பாம்பு உள்ளே வந்திருக்கும் என்றார்.

  நான் என் மகனிடம் பலமுறை அந்த கிளையை வெட்டும்படி கூறினேன் ஆனால் அவன் தான் அதனை வெட்டாமல் விட்டுவிட்டான் என்றார். ஆனால் அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது வேறுமாதிரி கூறினார்கள். அந்த மரக்கிளையை தற்போது தான் அவரது வீட்டின் மீது சாய்ந்துள்ளது. அதனை ஜன்னல் அருகே இழுத்து வைத்துள்ளனர் என்றனர். இந்த இரண்டு ஸ்டேட்மெண்டுகள் எங்களது சந்தேகத்தை வலுச்சேர்த்தது.

  மாதிரிப்படம்


  உத்ராவை கடித்த இரண்டாவது பாம்பு நாகப்பாம்பு. இது நடந்தது உத்ரா வீட்டில் அவரது அறைக்கு பாம்பு எப்படி வந்தது. அவரது அறையில் இரண்டு ஜன்னல்கள் இருந்தது. இரண்டும் 150 செண்டிமீட்டர் உயரத்தில் இருந்தது. ருத்ராவை கடித்ததாக கூறப்படும் நாகம் 150 செண்டிமீட்டர் நீளம் இருந்தது. பொதுவாக நாகப்பாம்புகள் தன்னுடைய நீளத்தில் மூன்றில் ஒருபங்கு அளவு உயரம் எழும் திறன் கொண்டது. அப்படியானால் ருத்ராவை கடித்த பாம்பினால் 50 செண்டிமீட்டர் உயரம் தான் எழ முடியும். பாம்புகளில் அடிப்படையின் படி  இயலாத காரியம். நாகங்கள் மாலை 6 மணி முதல் 8 மை வரை வேட்டையாடுகின்றன. அதன்பின்னர் நாகங்கள் நீண்ட ஓய்வு எடுத்துக்கொள்கின்றன. நாகங்களின் இயல்பின் படி அதனை ஆத்திரமூட்டாமல் அவை தாக்குவது கிடையாது. பாம்புகளின் விஷசுரப்பிகள் காலியானவுடன் அவை மீண்டும் உருவாக சிறிது நேரம் தேவைப்படும். கஞ்சத்தனமாகத்தான் விஷத்தை செலுத்தும். நாகங்கள் மூன்று விதங்களின் எதிரியை பயமுறுத்தும்.

  Also Read: ஸ்ரீபெரும்புதூரில் பதுங்கிய ஜார்க்கண்ட் கொள்ளையர்கள்.. போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை- நடந்தது என்ன?

  எதிரியை பயமுறுத்த சீறுவது, ஒரு சிறிய அளவு விஷத்தை எதிரியின் மீது செலுத்துவது அல்லது எதிரியின் மீது எல்லா விஷத்தையும் காலி செய்வது. வீரியன் வகை பாம்பு முதல் மாடியில் வந்து கடித்ததும் நாகப்பாம்பு இரண்டு முறை உத்ராவை கடித்ததும் எங்களது சந்தேகத்தை மேலும் வலுவாக்கியது. அதாவது உத்ராவை பாம்பு இயற்கையாக சீண்டவில்லை. யாரோ பாம்பை கொண்டு உத்ராவை கொலை செய்யத்திட்டுமிட்டுள்ளனர் எனத் தெரியவந்தது.

  சூரஜ் எதிராகவும் சில புகார்கள் இருந்தன. அவர் ஒரு வனவிலங்கு ஆர்வலர் என்பதால் வீட்டில் ஆடுகள், முயல், நாய்கள் ஆகியவற்றை வளர்த்து வந்துள்ளார். உத்ரா மரணத்துக்கு 6மாதம் முன்பு சூரஜ் வீட்டிற்கு பாம்பினை பிடித்து வந்து எல்லோருக்கும் காட்டியுள்ளார். இதனையடுத்து சூரஜ்-க்கு பாம்பு கொடுத்த பாம்பாட்டி சுரேஷை பிடித்தோம். சுரேஷிடம் விசாரித்ததில் சூரஜ்-க்கு பாம்பினை கொடுத்து அதனை திரும்பப்பெற்றதை ஒப்புக்கொண்டார். இவர்கள் இருவரும் இரண்டு முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். ஆனால் போனில் பலமுறை இருவரும் தொடர்புக்கொண்டு பேசியது தெரியவந்தது. உத்ரா பாம்பினால் கடிப்படுவதற்கு முன்பு இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். சூரஜ் உத்ரா மீது பாம்பினை ஏவி கொலை செய்தது உறுதியானது. ஆனால் ஆரம்பக்கட்ட விசாரணை உத்ராவை கொலை செய்ததை சூரஜ் ஒப்புக்கொள்ளவில்லை. சூரஜ் மிகவும் புத்திசாலி பாம்புகள் குறித்து அவரும் தெரிந்து வைத்திருந்தார்.

  வீரியன் பாம்பு முதல்மாடிக்கு வரை செல்லாது என்பது அவருக்கு தெரிந்திருந்தது. உத்ராவை பாத்ரூமில் வைத்து பாம்பு கடித்ததாக கூறினார். அவரது மொபைல்போன் அவரை காட்டிக்கொடுத்தது. அதாவது வீரியன் பாம்புகள் குறித்து கூகுளில் அதிகம் தேடி படித்திருந்தார். வீரியன் வகை பாம்பு ருத்ரவை கடித்த பின்னர் அதுகுறித்த தேடலை அவர் நிறுத்திவிட்டார். அதன்பின்னர் நாகப்பாம்புகள் குறித்து தேடிப்படித்துள்ளார். அதன்பின்னர் நாகம் உத்ராவை சீண்டியுள்ளது. இந்த இரண்டு பாம்புகள் குறித்து மட்டும் இணையத்தில் தேடிதேடிப்படித்தது ஏன். அதுதொடர்பான ஆராய்ச்சிகளை தற்போது ஏன் விட்டுவீட்டீர்கள் என்ற கேள்விக்கு அவரிடம் இருந்து முறையான பதில் இல்லை. பாம்பு உள்ளே வந்து கடித்தது என்பதே அவரது பதிலாக இருந்தது.

  இறந்துபோன பாம்பினை உடற்கூராய்வு செய்ததில் பாம்பின் வயிறு காலியாக இருந்தது தெரியவந்தது. அப்படியென்றால் யாரோ பாம்பினை பிடித்து பாட்டிலில் அடைத்து வைத்திருக்க வேண்டும். சூரஜ் மீதான ஆதாரங்களை காட்டியபோது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

  மாதிரிப்படம்


  இந்த வழக்கில் கண்ணால் பார்த்த சாட்சியங்கள் எதுவும் இல்லை. எங்களிடம் சூழ்நிலைகள் மட்டுமே ஆதாரங்களாக இருந்தன. கொலைக்காக பாம்பு பயன்படுத்தியதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருந்தோம். அதனால்தான் பாம்பை வைத்து போலியாக ஒரு பரிசோதனையை நடத்தினோம். உத்ரா உடம்பில் இருந்த பாம்பு தீண்டியபோது 2.5 செண்டிமீட்டர் மற்றும் 2.8 செ.மீ அளவுக்கு காயம் இருந்தது. இது பாம்பின் இயல்பான கடிகள் கிடையாது. பாம்பின் கையில் பிடித்துக்கொண்டு கடிக்க வைக்கும்போது அதன் தலைப்பகுதி விரிவடைத்து இவ்வாறு காயங்கள் ஏற்படுத்தும் இது அறிவியல் பூர்வமான ஆதாரம். அதனால் நாங்கள் 5 அடி நீள நாகத்தை கொண்டு  இதனை செய்துப்பார்த்தோம் அது 2.5 செ.மீ மற்றும் 2.8 செ.மீ காயங்களை ஏற்படுத்தியது. சூரஜ் மட்டுமே உத்ராவை பாம்பு கடிக்கும்போது அங்கு இருந்துள்ளார்.

  பாம்பாட்டி சுரேஷ் இந்த வழக்கில் அப்ரூவர் ஆனார். சூரஜ்-க்கு பாம்புகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தெரிந்திருந்தது. டிஎன் ஏ-க்களை கொண்டு சுரேஷ் கொடுத்த பாம்பை வைத்துதான் சூரஜ் உத்ராவை கொன்றார் என உறுதிசெய்தோம். பாம்பை அடைத்துவைக்க சூரஜ் பயன்படுத்திய டப்பாவை கைப்பற்றினோம். அதில் இருந்த டிஎன்ஏ போஸ்ட்மார்டம் செய்யப்பட்ட பாம்பின் டிஎன்ஏ ஒத்துப்போனது.

  பாம்புகடிகள் மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும். பாம்பு கடித்தால் உங்களால் தூங்க முடியாது.  பாம்பு இவ்வளவு வீரியமாக கடித்தும் உத்ராவுக்கு தெரியவில்லை. உத்ராவுக்கு தூக்கமாத்திரைகள் கொடுத்து உறங்க வைத்து பாம்பை வைத்து சீண்டி கொலை செய்துள்ளார். உத்ரா கொலை செய்யப்பட்டபோது சூரஜ் மட்டுமே இருந்துள்ளார். இந்த ஆதாரம் தான் சூரஜ் தான் கொலை செய்தார் என்பதை உறுதிசெய்தது” எனக் கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: