ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் `மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இந்தாண்டின் முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மின் கழிவுகளை அகற்றாவிட்டால், அது நமது சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு வட்டப் பொருளாதாரத்தில் பெரிய சக்தியாக மாறும் என்றார்.
தற்போது கணிசமான எண்ணிக்கையிலான பத்ம விருது பெற்றவர்கள் பழங்குடி சமூகத்தினர் என சுட்டிக்காட்டிய பிரதமர், பழங்குடி சமூகங்கள் எப்போதும் தங்கள் பாரம்பரியத்தை பாதுகாக்க ஆர்வமாக உள்ளதாக கூறினார். ஒடிசாவின் மகளிர் சுயஉதவி குழுவினர், தினையிலிருந்து பிஸ்கட், கேக் மற்றும் பிற உணவுப் பொருட்களைத் தயாரித்து அசத்தி வருவதாக குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முந்தைய அரசியலைப்பு குறித்து கல்வெட்டு உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆரோக்கியம் தொடர்பான இந்தியாவின் முன்மொழிவுக்குப் பிறகு சர்வதேச யோகா தினம் மற்றும் சர்வதேச தினை ஆண்டு ஆகிய இரண்டையும் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mann ki baat