புதுச்சேரியில் ஆழ்கடலிலிருந்து ஒரு டன் பயன்படுத்தப்பட்ட முகக்கவசத்தை அப்புறப்படுத்திய ஆழ்கடல் வீரர்கள்: கழிவுகள் கடலில் கொட்டப்படுவதாக வேதனை
புதுச்சேரியில் ஆழ்கடலிலிருந்து ஒரு டன் பயன்படுத்தப்பட்ட முகக்கவசத்தை அப்புறப்படுத்திய ஆழ்கடல் வீரர்கள்: கழிவுகள் கடலில் கொட்டப்படுவதாக வேதனை
புதுச்சேரியில் ஆழ்கடல் பகுதியில் இருந்து சுமார் ஒரு டன் அளவிலான பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் சேகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் ஆழ்கடல் பகுதியில் இருந்து சுமார் ஒரு டன் அளவிலான பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் சேகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றோருவருக்கு பரவமால் இருக்க பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல வண்ணங்களில் முகக்கவசங்களை அணிந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அணியும் மாஸ்குகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் பொது இடங்களிலும், சாலைகளிலும் வீசிவிட்டு செல்கின்றனர். அவை மழைநீரில் அடித்துச்செல்லப்பட்டு ஆழ்கடலில் மலைபோல் குவிந்துள்ளன.
'டெம்பிள் அட்வென்ஞ்சர்' நிறுவனத்தை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆழ்கடல் பகுதியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு சமயத்தில் கடலை சுத்தம் செய்யச்சென்றவர்கள் ஆழ்கடல் தூய்மையாக இருப்பதாக கூறி அதன் அழகான காட்சிகளை வெளியிட்டிருந்தனர்.
ஆழ்கடலில் மாஸ்குகளை அப்புறப்படுத்தும் நீச்சல் வீரர்
இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளாஸ்டிக் கழிவை சுத்தம் செய்யச் சென்ற நீச்சல் வீரர்கள் ஏராளமான பயன்படுத்தப்பட்ட மாஸ்குகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர்கள் இதுவரை சுமார் ஒரு டன் பயன்படுத்தப்பட்ட மாஸ்குகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.
ஆழ்கடல் பகுதியில் குவிந்துள்ள மாஸ்குகளை மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் உட்கொண்டால் அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் பாதிப்படையும் என்பதால் மாஸ்குகளை முறையாக அப்புறப்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.