ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரயில் இருக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..!

ரயில் இருக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..!

ரயில் இருக்கையில் ஆணுறை

ரயில் இருக்கையில் ஆணுறை

அம்பர்நாத் பகுதியின் கரே சாலையில் உள்ள ரயில் நிலையத்தை கடக்கும்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

ரயில் பயணங்கள் எப்போதும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பது இல்லை. ஆனால், குறைந்த செலவில் கண்ணியமான பயணமாக இருக்கும் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கக் கூடும். ஆனால், இதையெல்லாம் தாண்டிய ஒரு அருவருப்பான சம்பவம் பயணி ஒருவருக்கு நேர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் உள்ளூர் ரயிலில் பயணி ஒருவர் கடந்த 23ஆம் தேதி காலை பயணம் செய்துள்ளார். அம்பர்நாத் பகுதியின் கரே சாலையில் உள்ள ரயில் நிலையத்தை கடக்கும்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் அமர்ந்திருந்த இருக்கை எதிரே பயன்படுத்தப்பட்ட ஆணுறை ஒன்று கிடந்துள்ளது. அவர் இறங்கும் டோம்பிவலி ரயில் நிலையம் வரை அது அகற்றப்படாமல் அப்படியே இருந்தது.

அருவருப்பான இந்த சம்பவம் குறித்து புகைப்படத்துடன் மும்பை ரயில்வே, இந்தியன் ரயில்வே, மத்திய ரயில்வே ஆகியவற்றை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அந்த நபர். அதில், “என்ன ஒரு காட்சி.. பயன்படுத்தப்பட்ட ஒரு ஆணுறை எனது இருக்கைக்கு எதிரே உள்ளது. இப்போது காலை 9.40 மணி ஆகிறது” என்று குறிப்பிட்டு புகார் அளித்திருந்தார். புகைப்படத்தை பார்த்த ட்விட்டர்வாசிகள், பொதுமக்கள் பயணிக்கக் கூடிய ரயிலில் இப்படி செய்தது யார் என அதிர்ச்சியடைந்தனர். மேலும், உரிய நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் அளிக்குமாறும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மும்பையின் உள்ளூர் ரயில்களில் சுகாதாரமற்ற நிலை நிலவுவதாக பயணிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், இப்படியான ஒரு அருவருக்கத்தக்க சம்பவம் முதல்முறையாக தற்போதுதான் நிகழ்ந்துள்ளது. இதில் ரயில்வே நிர்வாகம் தலையிட்டு ரயில்களில் சுகாதாரத்தை பேண வேண்டும் என்று வலியுறுத்தல்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Condom, Indian Railways