புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 'பிஎம் கேர்' நிவாரண நிதியிலிருந்து ரூ.10,000 வழங்கவேண்டும் - மம்தா பானர்ஜி

'பிஎம் கேர்' நிவாரண நிதி மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 'பிஎம் கேர்' நிவாரண நிதியிலிருந்து ரூ.10,000 வழங்கவேண்டும் - மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
  • Share this:
பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா ஊரடங்கால் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் புலர்பெயர் தொழிலாளர்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அனைவருக்கும் மத்திய அரசு தலா 10 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 'பிஎம் கேர்' நிவாரண நிதிக்கு பொதுமக்கள் அளித்துள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு இதற்கு பயன்படுத்தலாம் எனவும் மம்தா பானர்ஜி யோசனை தெரிவித்தார்.

Also see:
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading