வீடுகளில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை பயன்படுத்தலாம் - மத்திய அரசு

வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்று கூறியுள்ளது.

வீடுகளில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை பயன்படுத்தலாம் - மத்திய அரசு
முகக்கவசம் (கோப்புப்படம்)
  • Share this:
வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தலில், பொதுமக்கள் வீடுகளில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களைப் பயன்படுத்துமாறும், குறிப்பாக வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்றும் கூறியுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவுவதைத் தடுக்க முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளபோதிலும், மத்திய மாநில அரசுகள், மக்கள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியில் நடமாடிக்கொண்டு இருக்கின்றனர். எனவே, வெளியில் செல்லும்போது முக கவசத்தை அணிவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Also see:
First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading