டிரம்ப் & பிரதமர் மோடி இடையே தொலைபேசி உரையாடல் - விவாதிக்கப்பட்டது என்னென்ன?

அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

டிரம்ப் & பிரதமர் மோடி இடையே தொலைபேசி உரையாடல் - விவாதிக்கப்பட்டது என்னென்ன?
நரேந்திர மோடி - டொனால்டு ட்ரம்ப்
  • Share this:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தொலைபேசியில் உரையாடியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

ஜி7 அமைப்பை விரிவுபடுத்துவது குறித்தும், அதில் இந்தியாவை இணைப்பது குறித்தும் டிரம்ப் பேசியதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதற்கு அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளதில் இந்தியா மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து விவாதித்த பிரதமர் மோடி, விரைவில் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸ், இந்தியா சீன எல்லை விவகாரம், மற்றும் உலக சுகாதார நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான தேவை குறித்து விவாதித்ததாகவும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.


மேலும் படிக்க...

’கவர்ச்சியான அறிவிப்புகள்... எல்லாம் மாயை...’ - கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

 
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading