'ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே' மற்றும் 'ஜன கன மன' ஆகிய பாடல்கள் பாடி பெயர் பெற்ற ஆப்பிரிக்க-அமெரிக்க பாடகி மேரி மில்பென், நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இந்தியா வருகை தருகிறார்.
"1959 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொண்ட டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் பாதைகளைப் பின்பற்றி, இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் அமெரிக்காவின் கலாச்சாரத் தூதராகப் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன்" என்று மில்பென் தெரிவித்தார். இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலின் (ICCR) அழைப்பின் பேரில் அவரது பயணம் அமைகிறது.
40 வயதான மில்பென், சுதந்திர தின விழாவிற்கு இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலால் இந்தியாவிற்கு அழைக்கப்பட்ட முதல் அமெரிக்க கலைஞர் ஆவார். அவர் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரப்பூர்வ விருந்தினராக வருவார் என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்டத்தின்போது கல்லூரி மாணவியாக ரகசிய வானொலி... யார் இந்த உஷா மேத்தா
"ஒரு வழியாக இந்தப் பொக்கிஷமான நாட்டிற்கு வருவதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன், இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்திய சமூகங்களுடனான எனது அர்த்தமுள்ள உறவை மதிக்கிறேன். மேலும் இந்தியாவின் சுதந்திரத்தின் இந்த முக்கியமான தினத்தின் போது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான முக்கியமான ஜனநாயகக் கூட்டணியை முன்னிலைப்படுத்தி நான் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். மற்ற நாடுகளுக்கு, நான் ஒரு சுற்றுலாப் பயணியாகச் செல்லலாம், ஆனால் இந்தியாவுக்கு, நான் யாத்ரீகராக வருகிறேன் " என்று மில்பென் கூறினார்.
உலகளாவிய நிறுவனமான Abris.io இன் இணை நிறுவனர்/தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அமெரிக்க-இந்திய உறவுகள் குறித்த மூலோபாய ஆலோசகரான ப்ரியா சமந்த் உடன் இணைந்து, முதல் முறையாக இந்தியாஸ்போரா குளோபல் ஃபோரத்தில் மில்பென் கலந்து கொள்கிறார்.
இதற்கு முன்னர், 2020 மெய்நிகர் சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் பாடினார். 2020 ஐ ஒட்டி 'ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே' எனும் பாடலை உருவாக்கி, பாடி வெளியிட்டார். இதற்காக இந்தியத் தூதர் மோக்ஸ்ராஜ் அவர்களிடமிருந்து ஹிந்தி மொழியை கற்றுக் கொண்டுள்ளார். தனது இந்திய பயணத்தில் டெல்லி, லக்னோ நகரங்களுக்குச் செல்ல இருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: American Lady, Independence day, Singer, United States of America, USA