ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவைக் குறித்து அமெரிக்க ஊடகங்கள் பாரபட்சமாகச் செயல்படுகின்றனர் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவைக் குறித்து அமெரிக்க ஊடகங்கள் பாரபட்சமாகச் செயல்படுகின்றனர் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அமெரிக்காவின் முக்கிய ஊடகமான வாஷிங்டன் போஸ்ட் உட்பட அமெரிக்க ஊடகங்கள் இந்தியாவைக் குறித்து பாரபட்சமாகச் செயல்படுவதாக அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaNew YorkNew YorkNew York

  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐக்கிய சபையின் 77வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க சென்றுள்ளார். இந்த நிலையில் இந்திய அமெரிக்கர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில்  பேசிய போது, அமெரிக்க ஊடகங்கள் இந்தியாவைக் குறித்து பாரபட்சமாக செயல்படுவாதக கூறியுள்ளார். அமெரிக்காவின் முக்கிய ஊடகமான வாஷிங்டன்போஸ்ட் உட்பட அமெரிக்க ஊடகங்கள் பற்றி அவர் மறைமுகமாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

  அவரின் இந்த பேச்சு அந்த கூட்டத்தில் பெரும் கைதட்டலைப் பெற்றது. மேலும் ஆண்டி இந்தியன் ஃபோர்சஸ் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், அவர்கள் மிகவும் மும்முரமாகப் பாரபட்ச நோக்கத்துடன் செயல்படுகின்றனர் என்பது என்னுடைய கருத்தாகவுள்ளது. நாங்கள் தான் இந்தியாவை வடிவமைக்கிறோம் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் அதில் சிலர் வாதம் பண்ண வெளியிலிருந்து வருகிறார்கள் என்று குறியுள்ளார்.

  தொடர்ந்து பேசிய ஜெய்சங்கர், சில குழுக்கள் இந்தியாவில் வெற்றி பெறவில்லை, சில குழுக்கள் வெளியில் இருந்து வெல்ல முயல்கின்றனர். இல்லையென்றால் வெளியிலிருந்து இந்தியாவை வடிவமைக்க முயல்கின்றனர் என்று அமெரிக்க ஊடகங்கள் உலக அரங்கில் இந்தியாவை எப்படி நிலைநாட்டுகின்றனர் என்று மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

  Also Read : உதயமானது 'ஜனநாயக விடுதலை கட்சி'.. காங்கிரஸுக்கு எதிரான புதிய கட்சியை தொடங்கிய குலாம் நபி ஆசாத்!

  இதனைத் தொடர்ந்து, இது நாம் கவனிக்கவேண்டியது. இந்தியாவைப் பற்றி அளிக்கப்படும் பார்வையை நாம் ஒழுங்குபடுத்த வேண்டும். அதனைப் பார்த்துக்கொண்டு நாம் சும்மா அமரக்கூடாது. நம்மை அடுத்தவர் வரையறுக்க விடக்கூடாது. அதனைச் சரி செய்வது முக்கியமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

  கலந்துரையாடலில் தொடர்ந்து அமெரிக்க ஊடகங்கள் அரக்கில் காஷ்மீர் பற்றிய பார்வை மற்றும் ஆர்டிகல் 370-பிரச்சினை போன்றவற்றைப் பற்றிப் பேசினார். மேலும் எது சரி, எது தவறு என்று மக்களுக்குக் கற்பிப்பது முக்கியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: External Minister jaishankar, United Nation