இந்தியாவிற்கு ₹7,100 கோடி போர் தளவாடங்களை விற்க ட்ரம்ப் ஒப்புதல்!

இந்தியாவிற்கு ₹7,100 கோடி போர் தளவாடங்களை விற்க ட்ரம்ப் ஒப்புதல்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 21, 2019, 1:46 PM IST
  • Share this:
இந்தியாவிற்கு 7,100 கோடி ரூபாய் மதிப்பிலான போர்த்தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய கடற்படையை வலிமைப்படுத்தும் வகையில் 13 அதிநவீன பீரங்கிகள், ஏவுகணைக்கான வெடிமருந்துகள், பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கும்படி அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையேற்று எம்.கே.45 ரகத்தை சேர்ந்த 13 கடற்படை பீரங்கிகள் மற்றும் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.


போர்க்கப்பல்கள், போர் விமானங்களை தாக்கி அழிப்பதற்கு பயன்படும் இந்த பீரங்கிகளால், இந்தியா எதிர்கொண்டு வரும் பாதுகாப்பு அச்சுறுதல்களை எளிதில் முறியடிக்க முடியும் என கூறப்படுகிறது.

மேலும், அமெரிக்காவிடம் இருந்து எம்.கே-45 ரக பீரங்கிகளை வாங்கிய ஜப்பான், தென்கொரியா, துருக்கி நாடுகளுடன் இந்தியாவும் இணைய உள்ளது கவனிக்கத்தக்கது.

Also see...
First published: November 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading