ஸ்விக்கியுடன் கைகோர்க்கும் மத்திய அரசு... ஆன்லைனில் தெருவோர உணவு விற்பனை

ஸ்விக்கியுடன் கைகோர்க்கும் மத்திய அரசு... ஆன்லைனில் தெருவோர உணவு விற்பனை

(கோப்புப்படம்)

ஸ்விக்கியுடன் இணைந்து தெருவோர உணவு விற்பனையாளர்களின் வணிகங்களை ஆன்லைனில் கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

  • Share this:
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் பொருளாதார நிலை மாறினாலும் தெருவோர வியாபாரிகளின் நிலை இன்னமும் அப்படியேதான் உள்ளது. கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை விரைவில் சரிகட்ட முடியாத சூழல் உள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் (MoHUA) கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, நுகர்வோருக்கு ஆன்லைன் அணுகலை வழங்குவதற்கும், வணிகங்களை வளர்க்க உதவுவதற்கும் ஸ்விக்கி, தெரு உணவு விற்பனையாளர்களுக்கு தளம் அமைத்துக்கொடுக்கிறது.

இதற்கென பிரதம மந்திரி ஸ்ட்ரீட் வெண்டார்ஸ் ஆத்மிர்பர் நிதி (PM SVANidhi) திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆரம்பத்தில், இந்தத் திட்டம் அகமதாபாத், சென்னை, டெல்லி, இந்தூர் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் 250 நடைபெற்றது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு நவீன தொழில்நுட்பம் சார்ந்த வசதிகளை தெரு விற்பனையாளர்களுக்கு ஸ்விக்கி வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டம் வெற்றிகரமாக முடிந்ததும் இந்தத் திட்டத்தை நாட்டின் பல பகுதிகளிலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Also read: ஆன்லைன் சுகாதார காப்பீட்டு திட்டங்கள்? - நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய 5 முக்கிய காரணிகள்கூட்டுறவுச் செயலாளர் சஞ்சய் குமார் மற்றும் ஸ்விக்கி தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் போத்ரா ஆகியோருக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் வீடியோ கான்பிரென்ஸ் மூலம் நடந்தது. அதில் MoHUA செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா, ஸ்விக்கி அதிகாரிகள் மற்றும் அகமதாபாத், சென்னை, டெல்லி, இந்தூர் மற்றும் வாரணாசி நகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர். தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தெருவோர விற்பனையாளர்களுக்கு ரூ.10,000 வரை மூலதனக் கடனை வழங்குவதற்காக PM SVANidhi திட்டம் ஜூன் 1, 2020 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கடன்கள் ஒரு வருடத்திற்குள் மாதத் தவணைகளில் திருப்பிச் செலுத்தப்படுமாறு கூறப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 7% வட்டி மானியத்தை அளிக்கிறது. இது காலாண்டு அடிப்படையில் நேரடி நன்மை பரிமாற்றத்தின் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். உண்மையில் இந்தத் திட்டம் செயலுக்கு வந்து வெற்றிகண்டால் பல தெருவோர வியாபாரிகளுக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Published by:Rizwan
First published: