Home /News /national /

வாக்குறுதியை நிறைவேற்றாத எம்.எல்.ஏவுக்கு ஷாக் கொடுத்த தொகுதி மக்கள்..

வாக்குறுதியை நிறைவேற்றாத எம்.எல்.ஏவுக்கு ஷாக் கொடுத்த தொகுதி மக்கள்..

FakeTower

FakeTower

ஆத்திரமடைந்த கிராமவாசி ஒருவர் பேசுகையில், மொபைல் டவரை அமைத்து தரும் வரை இனி எம்.எல்.ஏ, அமைச்சர் என யாரையும் கிராமத்திற்குள் நுழைய விடமாட்டோம். மீறி நுழையும் அரசியல்வாதிகள் மீது முட்டைவீச்சில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

    தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தராத எம்.எல்.ஏவை நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்து பொதுமக்கள் அவமதித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    ஒடிசா மாநிலம் காலாஹண்டி மாவட்டத்தில் உள்ள லஞ்சிகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பந்தாபரி கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக தங்கள் பகுதியில் நெட்வொர்க் கவரேஜ் இல்லை என புகார் தெரிவித்து வருகின்றனர். தங்கள் பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை சரிவர கிடைக்காததால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவைகளை பெறுவதற்கு கூட தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

    மேலும், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மொபைல் சேவை கிடைக்காமல் அவதியுற்றுவருவதால், தங்கள் பகுதியில் பி.எஸ்.என்.எல் மொபைல் டவர் ஒன்றை நிறுவ வேண்டும் என உள்ளூர் எம்.எல்.ஏவான பிரதீப் குமார் திஷாரியை நேரில் சந்தித்து மக்கள் முறையிட்டனர். எம்.எல்.ஏவும் அவர்களின் பகுதியில் மொபைல் டவர் நிறுவித்தருவதாக உறுதி மொழி அளித்திருக்கிறார். இருப்பினும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பின்னரும் தங்கள் பகுதியில் மொபைல் போன் டவர் நிறுவாததால் பொதுமக்கள் தொடர்ந்து இன்னலை சந்தித்து வருகின்றனர்.

    Also read:  மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்கள்

    இதனிடையே, எம்.எல்.ஏ பிரதீப் குமார் திஷாரி தங்கள் கிராம பஞ்சாயத்துக்கு வருகை தருவதாக கேள்விப்பட்ட பொதுமக்கள் நூதன முறையில் அவரை அவமதித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    எம்.எல்.ஏ வருவதை அறிந்த அக்கிராமத்து மக்கள், மூங்கிலால் ஆன மொபைல் டவர் ஒன்றை கட்டமைத்து, அந்த டவரை எம்.எல்.ஏ திறந்து வைப்பதாக அவரின் பெயரை குறிப்பிட்டு அதன் அருகே பேனர் ஒன்றை நிறுவியுள்ளனர். எம்.எல்.ஏவை அழைத்து வந்து இந்த போலியான மொபைல் டவரை திறந்து வைக்க செய்து அவருக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.

    Also read:  திவாலாகும் இலங்கை அரசு.. ஸ்தம்பித்த பொருளாதாரம் - மகிந்த ராஜபக்சே பதவி விலகல்?

    ஆத்திரமடைந்த கிராமவாசி ஒருவர் பேசுகையில், மொபைல் டவரை அமைத்து தரும் வரை இனி எம்.எல்.ஏ, அமைச்சர் என யாரையும் கிராமத்திற்குள் நுழைய விடமாட்டோம். மீறி நுழையும் அரசியல்வாதிகள் மீது முட்டைவீச்சில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

    இச்சம்பவம் குறித்து பிஜூ ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ பிரதீப் குமார் திஷாரி கூறுகையில், “ஒரு டவர் அமைப்பதற்கு மத்திய அரசு தான் ஒப்புதல் தர வேண்டும். நான் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துவிட்டேன். எனது பங்கு வேலையை நான் முடித்துவிட்டேன். இனி டவர் அமைக்க அனுமதியை அவர்கள் தான் தரவேண்டும் என விளக்கம் தந்தார்.

     
    Published by:Arun
    First published:

    Tags: MLA, Odisha

    அடுத்த செய்தி