• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மறு வாய்ப்பு இல்லை: கொரோனாவினால் யுபிஎஸ்சி எழுதும் கடைசி வாய்ப்பைத் தவறவிட்டவர்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

மறு வாய்ப்பு இல்லை: கொரோனாவினால் யுபிஎஸ்சி எழுதும் கடைசி வாய்ப்பைத் தவறவிட்டவர்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

UPSC

UPSC

“கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் எங்களால் தேர்வு எழுத முடியவில்லை, தேர்வுக்குத் தயாராகவும் முடியவில்லை.”

  • Share this:
    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக யுபிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல்போன கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு கூடுதலாக எந்த வாய்ப்பும் வழங்கப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி யுபிஎஸ்சி தேர்வு நடந்தது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக பலர் தேர்வு எழுதி வரவில்லை. பலர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருந்தனர். கரோனா நோயாளிகளாகவும், கரோனா நோயிலிருந்து சிகிச்சை முடித்த நிலையில் இருந்ததாலும், போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை என்பதால், தேர்வு எழுத முடியவில்லை.

    இதையடுத்து, யூபிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல்போன கடைசி வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிட வேண்டும் எனக் கோரி தேர்வு எழுத தவறவிட்ட மாணவர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

    அந்த மனுவில், “கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் எங்களால் தேர்வு எழுத முடியவில்லை, தேர்வுக்குத் தயாராகவும் முடியவில்லை. தேர்வு எழுதுவதைத் தவறவிட்டவர்கள் பலர் கொரோனா சிகிச்சைப் பணியில் இருந்தார்கள். அவர்களின் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தனர். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் இன்னலை அனுபவித்தனர்.

    தேர்வுக்குத் தயாராக முறையான கட்டமைப்பு வசதிகளும் இல்லை. வருமானம் ஈட்டிக்கொண்டே தேர்வுக்குப் படித்த பலருக்கும் கொரோனா காலத்தில் வேலையிழப்பு ஏற்பட்டு வாழ்க்கையை நடத்துவதே சிரமமானது.

    ஆதலால், தேர்வு நடந்த நேரத்தில் தேர்வு எழுதுவதைவிட ஒவ்வொருவரும் தங்கள் உடல் நலத்தையும், உயிரையும் தற்காத்துக் கொள்வதற்கே முன்னுரிமை அளித்தார்கள். ஆதலால், மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும” எனக் கோரியிருந்தனர்.

    இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். காவே, கிருஷ்ணா முரேரா அமர்வில் இன்று காணொலி மூலம் விசாரிக்கப்பட்டது. அப்போது மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ ஆஜரானார்.

    அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், “யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதைத் தவறவிட்ட கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதற்கு அரசு தயாராக இல்லை. இதற்குரிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் தேவை. மத்திய அரசிடம் இருந்து நேற்று இரவுதான் இதற்கான உத்தரவு எங்களுக்குக் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

    இதையடுத்து, இந்த வழக்கை வரும் 25-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: