யுபிஎஸ்சி பிரிலிமினரி தேர்வுக்கான நுழைவு சீட்டு இன்று
upsc.gov.in and
upsconline.nic.in இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த நுழைவுச் சீட்டு ஜூன் 5ஆம் தேதி வரை இருக்கும். எனவே, தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் 5ஆம் தேதிக்குள் இதை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த நுழைவுச் சீட்டில் ரோல் நம்பருடன், தேர்வு எழுதும் நபர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல்களும் இடம் பெற்றிருக்கும். மேலும், இதில் தேர்வு விதிகளும் இடம் பெற்றிருக்கும்.
தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யும் வழி:
Step 1:
upsconline.nic.in என்ற இணையதளத்திற்குள் நுழைய வேண்டும்
Step 2: அந்த பக்கத்தில் அட்மிட் கார்டு என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்
Step 3: அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை படித்துவிட்டு ஓகே என்பதை கிளிக் செய்ய வேண்டும்
Step 4: பதிவு எண் அல்லது ரோல் நம்பரை வைத்து லாக் இன் செய்து அதில் தேவையான தகவல்களை அளித்து நுழைவுச் சீட்டை டவுன்லோடு செய்ய வேண்டும்.
நுழைவுச் சீட்டை டவுன்லோடு செய்த பின் தேர்வர்கள் அந்த நுழைவுச் சீட்டில் ஏதேனும் தவறுகள் இடம் பெற்றுள்ளதா என சரி பார்க்க வேண்டும். ஏதேனும் தவறு இருந்தால், ஆணையத்திடம் உடனடியாக முறையிடவும். குறிப்பாக, பெயர், ரோல் நம்பர், ரிஜிஸ்டரேஷன் ஐடி, தேர்வுக்கான ஆண்டு ஆகியவற்றை நன்கு செக் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க:
முதுகலை படிப்புகளுக்கு வரும் 13ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்- சென்னை பல்கலைக்கழகம்
இந்த நுழைவு சீட்டை சம்பந்தப்பட்ட தேர்வர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், நுழைவுச் சீட்டில் புகைப்படம் தெளிவாக இல்லாதபட்சத்தில், தேர்வர் இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும். யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு ஜூன் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தேர்ச்சி பெற்று பிரதான தேர்வுக்கு நுழைபவர்களுக்கான நுழைவுச் சீட்டு பின்னர் தனியாக வழங்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.