ஹோம் /நியூஸ் /இந்தியா /

கொரோனால் 2 ஆண்டு மிஸ்ஸான சிவில் சர்வீஸ் தேர்வு.. வயது வரம்பை கடந்தவர்கள் வாய்ப்பு கேட்டு போராட்டம்..

கொரோனால் 2 ஆண்டு மிஸ்ஸான சிவில் சர்வீஸ் தேர்வு.. வயது வரம்பை கடந்தவர்கள் வாய்ப்பு கேட்டு போராட்டம்..

சிவில் சர்வீஸ் தேர்வர்கள் போராட்டம்

சிவில் சர்வீஸ் தேர்வர்கள் போராட்டம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

கொரோனா காலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வெழுத முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

நாட்டில் கொரோனா உச்சத்தில் இருந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில், நோய்பரவல் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தேர்வுகள் நடைபெறாத 2 ஆண்டுகளில் தேர்வில் பங்கேற்க நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை கடந்தவர்கள், இனி தேர்வெழுத வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்தது.

நோய் பரவல் காரணமாக தேர்வு எழுத முடியாத நிலையை கருதி, தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை கடந்தவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

First published:

Tags: Competitive Exams, Corona, Protest, UPSC