உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

news18
Updated: January 12, 2019, 7:10 PM IST
உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
news18
Updated: January 12, 2019, 7:10 PM IST
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை சில தினங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பி-க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

triple talaq bill passed in lok sabha

இதையடுத்து மாநிலங்களவையில் மசோதா ஜனவரி 9-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதா 149 உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு அதிமுக, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு  10 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியதால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது

இதன்படி ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் அல்லது 5 ஹெக்டேருக்கும் குறைவாக விவசாய நிலம் உள்ளவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும். 1000 சதுர அடிக்கு கீழ் சொந்த வீடு உள்ளவர்களுக்கும், நகராட்சிப் பகுதிகளில் 900 சதுர அடிக்கு குறைவான வீட்டுமனை உள்ளவர்களுக்கும், நகராட்சி அல்லாத பகுதிகளில் 1800 சதுர அடிக்கு குறைவான வீட்டுமனை உள்ளவர்களும் இச்சலுகையைப் பெறலாம்.

also see
Loading...
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...