ஹோம் /நியூஸ் /இந்தியா /

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி.. உடன் இருந்து கவனிக்கும் பிரியங்கா காந்தி!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி.. உடன் இருந்து கவனிக்கும் பிரியங்கா காந்தி!

சோனியா காந்தி

சோனியா காந்தி

பிரியங்கா காந்தி தனது தாயார் சோனியா காந்தியை உடனிருந்து கவனித்து கொள்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் நேற்று டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோனியா காந்தியை அவரது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி மருத்துவமனையில் உடனிருந்து கவனித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

சோனியா காந்தியின் உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர் அரூப் பாசு தலைமையிலான மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது. சோனியா காந்திக்கு சுவாச குழாய் பகுதியில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ராகுல் காந்தி தனது அடுத்த கட்ட பாரத் ஜோடோ யாத்திரையை கடந்த செவ்வாய் கிழமை உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடங்கினார். அன்றில் இருந்தே, சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், செவ்வாய் மாலையே ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் டெல்லி திரும்பினர்.

இதையும் படிங்க: “இனி வாய்தா கேட்டால் மனு தள்ளுபடி..” நீட் வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

இந்நிலையில், தாயார் உடல் நலனை விசாரித்து விட்டு ராகுல் காந்தி தனது யாத்திரையை நேற்று மீண்டும் தொடங்கினார். பிரியங்கா காந்தி தாயார் சோனியா காந்தியை உடனிருந்து கவனித்து கொள்கிறார்.

First published:

Tags: Priyanka gandhi, Sonia Gandhi, Viral infection