ஹோம் /நியூஸ் /இந்தியா /

காசியும் தமிழ்நாடும் ஒன்னுதான்.. ‘காசி தமிழ் சங்கமம்’ குறித்து தமிழில் ட்வீட் செய்த யோகி ஆதித்யநாத்!

காசியும் தமிழ்நாடும் ஒன்னுதான்.. ‘காசி தமிழ் சங்கமம்’ குறித்து தமிழில் ட்வீட் செய்த யோகி ஆதித்யநாத்!

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

ஒரு மாத காலம் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக வருகை தரும் தமிழர்களுக்கு உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே தொன்மையான நாகரீக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி வாரணாசியில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழக பிஎச்யு நிகழ்வின் ஒரு பகுதியாக காசி, தமிழ்நாடு இடையேயான தொடர்புகள் மற்றும் பகிரப்பட்ட மாண்புகளை வெளிக்கொணர்வதை நோக்கமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு பிராந்தியங்களுக்கு இடையே மக்களுடனான உறவை ஆழப்படுத்துவது என்பவை இதன் பரந்த நோக்கம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த நிகழ்வு இன்று தொடங்கிய நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்து தமிழில் ட்வீட் செய்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், "காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான்.

  'காசி தமிழ் சங்கமம்' ஆனது இந்த 'ஒன்றுபட்ட நிலை’யின் புனிதமான மற்றும் வளமான உணர்வை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான ஊடகம். அன்பென்ற உணர்வு இழைகளினால் இந்தியா முழுவதையும் பிணைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வரவேற்பு. பாபா விஸ்வநாதரின் புண்ணிய ஸ்தலத்தில் 'காசி-தமிழ் சங்கமம்' விழாவிற்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும்/பிரமுகர்களுக்கும் அன்பான வரவேற்பு. இந்த விழா மரியாதைக்குரிய பிரதமரின் 'ஏக் பாரத்-ஷ்ரேஷ்டா பாரத்' உறுதிமொழிக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும்.இந்த நிகழ்வு இந்தியாவின் கலாச்சார நாகரிகத்தில் 'ராம சேது' போலவே இருக்கும்" இவ்வாறு அவர் தனது  ட்வீட் செய்தியில் தெரிவித்துள்ளார்.

  ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வின் போது தமிழ்நாட்டிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் காசிக்கு இந்திய ரயில்வே மொத்தம் 13 ரயில்களை இயக்கவுள்ளன. முதலாவது ரயில் 216 பிரதிநிதிகளுடன் இன்று தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயிலில் 35 பிரதிநிதிகள் ராமேஸ்வரத்தில் இருந்தும், 103 பேர் திருச்சிராப்பள்ளியில் இருந்தும், 78 பேர் சென்னை எழும்பூரில் இருந்தும் செல்வார்கள்.

  இதையும் படிங்க: இனி ரயிலுக்கு குறுக்கே மாடு வராது.. வேற லெவல் ப்ளானை கையில் எடுத்த ரயில்வே!

  இந்த ரயில்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணம் செய்வார்கள். இந்த பிரதிநிதிகள் ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களிலிருந்து தங்களின் பயணத்தை தொடங்குவார்கள். இந்த ரயில்கள் செல்லும் வழியில் 21 ரயில்நிலையங்களில் நிற்கும். ஒவ்வொரு ரயிலிலும் 216 பிரதிநிதிகள் பயணம் செய்வார்கள்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Tamil, Twitter, Uttar pradesh, Yogi adityanath