உத்தரப் பிரதசே மாநிலத்தின் லக்னோ பகுதியைச் சேர்ந்தவர் ரூபி. இவர் ஆசை ஆசையாக நாய் ஒன்றை செல்லப் பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் வளர்த்த நாய் இவரையும் இவரது குழந்தையையும் கடித்துள்ளது. தனது வளர்ப்பு நாயின் செயலால் ஆத்திரமடைந்த ரூபி, அதை கொலை செய்துள்ளார்.
அத்தோடு நிற்காமல் உயிரிழந்த நாயின் உடலை அருகே உள்ள ஏரியில் வீச திட்டமிட்டு அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் ரூபி நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த ரூபியின் கணவர் ஏரி பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஏரியின் கரை பகுதியில் ரூபியின் செருப்புகள் கிடந்துள்ளன. மனைவியை காணவில்லை என்ற அதிர்ச்சியில் உள்ளூர் ஆட்களை அழைத்த நிலையில், ஏரியில் முழ்கி ரூபி உயிரிழந்தது தெரியவந்தது.
உள்ளூர்வாசிகளின் உதவியுடன் உயிரிழந்த ரூபியின் உடலை நீரில் இருந்து கணவர் மீட்டார். தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் கிழக்கு மண்டல ஏடிசிபி சையது அலி அப்பாஸ் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றினர். ரூபியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்படும் என காவலர் சையது அலி அப்பாஸ் கூறியுள்ளார். நாயை கொலை செய்து அதை வீச சென்ற போது நீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dog, Uttar pradesh