ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை: பட்டியல் இன இளம்பெண் உயிரிழப்பு.. நள்ளிரவிலேயே தகனம் செய்ய வற்புறுத்தியதாக கதறும் குடும்பத்தினர்..
உத்தரப்பிரதேசத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

மாதிரிப் படம்
- News18 Tamil
- Last Updated: September 30, 2020, 10:17 AM IST
உத்தர பிரதேச மாநிலத்தில், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த பெண்ணின் உடலை, வீட்டுக்கு கூட எடுத்து வர காவல்துறையினர் விடவில்லை என அப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண், நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், நாக்கு வெட்டப்பட்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு கிடந்தார். இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய் அன்று உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரது உடல் சொந்த கிராமத்துக்கு நள்ளிரவு ஒரு மணியளவில் கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதுதொடர்பாக பேசிய பெண்ணின் சகோதரர்கள், போலீசார் அவசர அவசரமாக இரவிலேயே உடலை தகனம் செய்ய தங்களை வற்புறுத்தியதாக கூறினர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க.. சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மற்றொரு வைரஸ் - ICMR எச்சரிக்கை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தீப், லவ்குஷ்,ரவி மற்றும் ராம்குமாரிடம் விசாரணை நடைபெறுவதாக ஹத்ராஸ் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அவரது உடல் சொந்த கிராமத்துக்கு நள்ளிரவு ஒரு மணியளவில் கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதுதொடர்பாக பேசிய பெண்ணின் சகோதரர்கள், போலீசார் அவசர அவசரமாக இரவிலேயே உடலை தகனம் செய்ய தங்களை வற்புறுத்தியதாக கூறினர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க.. சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மற்றொரு வைரஸ் - ICMR எச்சரிக்கை