Home /News /national /

ஆண் குழந்தை இல்லாததால் பெண் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கணவர்- உ.பியில் கொடூரம்

ஆண் குழந்தை இல்லாததால் பெண் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கணவர்- உ.பியில் கொடூரம்

பெண்களுக்கு எதிரான வன்முறை

பெண்களுக்கு எதிரான வன்முறை

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆண் குழந்தை பெறாததால், பெண் ஒருவர் மீது அவரது கணவரும், கணவரின் குடும்பத்தினரும் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தின் ராம்நகர் ஜுன்கா பகுதியைச் சேர்ந்தவர் சுதா சிங். 31 வயதான இவருக்கு ஏழு வயதிலும், 2 வயதிலும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த பெண்ணை இவரது கணவரும், கணவரின் குடும்பத்தினரும் ஆண் குழந்தை இல்லாத காரணத்தால் நீண்ட காலமாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் அந்த பெண் தொடர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.

    இந்நிலையில், நேற்றிரவு இந்த பெண் மீது அவரது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் பயங்கரமாக அடித்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த பெண்ணை தாக்கியதோடு மட்டும் அல்லாமல், அவரது கணவர் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் மரக்கட்டைகளை செலுத்தி கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார்.

    இதன் காரணமாக அந்த பெண் தாங்க முடியாத பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். தப்பித்தால் போதும் என்ற நோக்கில் வீட்டை விட்டு பெண் வெளியே வந்துள்ளார். அப்போதும் பொது வெளியில் வைத்த அந்த பெண் மீது அவரது குடும்பத்தினர் அடித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த பெண் மயங்கி விழவே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்தை விட்டு தப்பியோடிய நிலையில், அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் நிலைமை மோசமாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: மனைவியுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு.. அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்த கொடுமை - ஐஐடி பட்டதாரி மீது மனைவி புகார்

    இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை குற்றவாளிகளை தேடி வருகிறது. அத்துடன் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் காவல்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Crime News, Husband Wife, Murder case

    அடுத்த செய்தி