Home /News /national /

கணவனை மரத்தில் கட்டி வைத்து மனைவியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம்...

கணவனை மரத்தில் கட்டி வைத்து மனைவியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம்...

Gang Rape

Gang Rape

கணவரை தாக்கி அவரை மரத்தில் கட்டி வைத்த கும்பல், அவரது கண் முன்னே மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

    கணவனை மரத்தில் கட்டி வைத்து மனைவியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் 24 வயது கணவனும், 21 வயது மனைவியும் கடந்த 22-ம்தேதி இரவு தங்களது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். நடந்து சென்று கொண்டிருந்த அவர்களை, திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய கும்பல் ஒன்று மறித்தது.

    இதையடுத்து கணவரை தாக்கி அவரை மரத்தில் கட்டி வைத்த கும்பல், அவரது கண் முன்னே மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முசாபர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்துள்ளனர்.

    இதையும் படிங்க - பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்ச்-31ல் காங்கிரஸ் போராட்டம்

    கைதானவர்களில் 2 பேர் சிறுவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கணவரின் தாயாருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் அவர்களைப் பார்க்க இருவரும் சென்றதாகவும், அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்திருந்த நிலையில், குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அதனை பார்க்க வீடு திரும்பியதாகவும் கணவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க - வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு வாக்கு?

    இந்த சம்பவம் குறித்து முசாபர் நகர் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் யாதவ் கூறுகையில், 'குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவர் மிதும் வழக்குப்பதிவு செய்துள்ளோம். 4 பேர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் அதனை வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். அவர்களில் 2 பேர் சிறுவர்கள்.' என்று தெரிவித்தார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Crime News

    அடுத்த செய்தி