Home /News /national /

5 மாநில தேர்தல்: காங்கிரஸ் வாக்கு சதவீதம் சரிந்தது.. உ.பி.யில் 3% கூட எட்டவில்லை

5 மாநில தேர்தல்: காங்கிரஸ் வாக்கு சதவீதம் சரிந்தது.. உ.பி.யில் 3% கூட எட்டவில்லை

Congress

Congress

கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 2017ல் தனிபெரும் கட்சியாக விளங்கிய காங்கிரஸ் தற்போது 2வது இடத்தையே பிடித்துள்ளது.  அதன் வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது. காங்கிரஸ் உடனான கூட்டணி என்பது கூட்டணி கட்சிகளுக்கும் பாதகமான முடிவை அளிக்கும் விதமாக உள்ளது.

மேலும் படிக்கவும் ...
    5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சியை யார் பிடித்துள்ளனர் என்பது உறுதியாகிவிட்டது.  5ல் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைபற்றியுள்ளது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சியோ தங்களிடம் இருந்த பஞ்சாப் மாநிலத்தை இழந்ததோடு மற்ற மாநிலங்களிலும் வாக்கு சதவீதத்தில் சரிவை கண்டுள்ளது.

    பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் பஞ்சாப் தவிர்த்த பிற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.  காங்கிரஸ் வசம் இருந்த பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பிரியங்கா காந்தி சூறாவளி பிரச்சாரம் செய்தார். எனினும், கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளைக் கூட பெற அக்கட்சி தவறிவிட்டது. காங்கிரஸ் கட்சி 3 சதவீத வாக்குகளை கூட பெறவில்லை. இதேபோல், பஞ்சாப்பில் 2017ல் 38.5% ஆக இருந்த காங்கிரஸ் வாக்கு சதவீதம் 2022ல்  23.3 % ஆக குறைந்துள்ளது.

    மேலும் படிக்க: பதவியேற்பு விழா ராஜ்பவனில் அல்ல.. ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் அதிரடி!!


    கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 2017ல் தனிபெரும் கட்சியாக விளங்கிய காங்கிரஸ் தற்போது 2வது இடத்தையே பிடித்துள்ளது.  அதன் வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது. காங்கிரஸ் உடனான கூட்டணி என்பது கூட்டணி கட்சிகளுக்கும் பாதகமான முடிவை அளிக்கும் விதமாக உள்ளது. 2017ல் தேர்தலில் 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற கோவா பார்வார்ட் கட்சி தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்து 1 தொகுதியில் மட்டுமே முன்னணியில் உள்ளது.   

    இதையும் படிங்க: உ.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்தது எப்படி? அரசியல் ஆர்வலர்கள் கூறும் காரணங்கள்


    மணிப்பூரில் 2017ல் 35.1 சதவீதமாக இருந்த காங்கிரஸ் வாக்கு சதவீதம் 2022ம் ஆண்டு 17 சதவீதமாக குறைந்துள்ளது. 2011ம் ஆண்டிற்கு பிறகு அசாம் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் அரசாங்கம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்தே வருகிறது. பஞ்சாப்பில் இது தொடர்கிறது. இதற்கு முன்பு டெல்லியில் ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது, தற்போது பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி வளர்ச்சியால் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது குறிப்பிடதக்கது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Congress, Election 2022, Uttar pradesh

    அடுத்த செய்தி