போலீஸ் லோகோ கொண்ட காரில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! முன்னாள் காவல்துறை அதிகாரியின் மகன், காவலர் கைது

மூன்று நண்பர்களுடன் இருந்த ஜெய் பிரகாஷ், என் மகளைக் கட்டாயப்படுத்தி காரில் ஏற்றியுள்ளார். பின்னர், ஆள் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று நான்கு பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

போலீஸ் லோகோ கொண்ட காரில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! முன்னாள் காவல்துறை அதிகாரியின் மகன், காவலர் கைது
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: December 4, 2019, 8:46 PM IST
  • Share this:
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை காரில் கடத்திச் சென்று நான் பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கால்நடை மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அந்தச் சுவடு மறைவதற்குள் நேற்று பீகாரில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தநிலையில், உத்தரப் பிரதேசத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமியைக் கடத்திச் சென்று நான்கு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அந்தச் சிறுமி காவல்துறை இலட்சினை ஒட்டப்பட்ட காரில் கட்டப்பட்டுள்ளார். இதுகுறித்து தெரிவித்த உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்திலுள்ள ஹாலியா பகுதியின் காவல் ஆய்வாளர் தேவிவர் சுக்லா, ‘இதுதொடர்பாக, நான்கு பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் ஒருவர் மத்திய பாதுகாப்பு படையில் பணி செய்யும் காவலரும், முன்னாள் காவல்துறை அதிகாரியின் மகனும் உள்ளடங்குவார்கள்.


முன்னாள் சிறைத்துறை அதிகாரி பிரிஜ்லால் மவுரியாவின் மகன் ஜெய் பிரகாஷ் மவுரியா. அவருடைய சகோதரி திருமணத்துக்குப் பிறகு ஹலியா கிராமத்தில் வசித்துவருகிறார். அதனால், ஜெய் பிரகாஷ் அவ்வப்போது ஹலியா கிராமத்துக்குச் சென்றுள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியுடன் ஜெய் பிரகாஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, ‘என்னுடைய மகளை செல்போன் மூலம் தொடர்புகொண்ட ஜெய்பிரகாஷ் கிராமத்துக்கு வெளியே ஜெய் பிரகாஷ் வரச்சொல்லியுள்ளார். அங்கே, உடன் மூன்று நண்பர்களுடன் இருந்த ஜெய் பிரகாஷ், என் மகளைக் கட்டாயப்படுத்தி காரில் ஏற்றியுள்ளார். பின்னர், ஆள் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று நான்கு பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அந்தச் சிறுமியுடன் காரில் சென்றபோது, காவல்துறை இலட்சினையுடன் கார் இருந்தநிலையில், பணியில் இருந்த காவலர் ஒருவர் காரை நிறுத்தி சோதனை செய்துள்ளார். அப்போது, காரிலிருந்த சிறுமி சத்தம் போட்டு அழுதுள்ளார். அதனையடுத்து, காரிலிருந்த ஜெய் பிரகாஷ், லவ் குமார் பால், கணேஷ் பிரசாத், மத்திய பாதுகாப்பு படைக் காவலர் மகேந்திர குமார் யாதவ் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றம்சாட்டுள்ள நான்கு பேரும் மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.Also see:

First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading