லெஸ்பியன் உறவில் ஈடுபட்டதாக பள்ளியில் மாணவிகளை அடித்து அவமதித்த ஆசிரியை!

Representational image

மாணவிகள் இருவரையும் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

  • Share this:
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறி பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவரை பள்ளி வளாகத்தில் ஆசிரியை அடித்து துன்புறுத்தி, அவமதித்ததாக பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் லிசரி கேட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த வியாழன்று பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவரை அழைத்த ஆசிரியர் அவர்கள் ஹோமோசெக்ஸ் எனப்படும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறி அடித்து உதைத்துள்ளார்.

பின்னர் அம்மாணவிகள் இருவரையும் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டுக்கு சென்ற மாணவிகள் இருவரும் ஆசிரியையின் நடவடிக்கை குறித்து தங்களின் பெற்றோர்களிடம் எடுத்துரைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை பள்ளிக்கு சென்று சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சக மாணவ, மாணவியரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஷயமறிந்து காவல்துறையினர் அங்கு வந்து நிலைமையை சரிசெய்தனர். இது குறித்து மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகையில் அவ்விரு மாணவிகளும் உறவினர்கள் எனவும், ஒரே பகுதியில் வசித்து வரும் நிலையில் அந்த ஆசிரியை இது போல மிருகத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார் என தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Also Read: செக்ஸ் வீடியோ காட்டி 4ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த தலைமை ஆசிரியர்!

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் லிசரி கேட் காவல் ஆய்வாளர் இது குறித்து கூறும்போது, தகவல் கிடைத்து பள்ளிக்கு வந்து பரபரப்பை அடக்கினோம். எனினும் சம்பவம் குறித்து யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

மாணவியை சீரழித்த தலைமை ஆசிரியர்:

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரின் கோந்தலமாவ் பிளாக்கில் உள்ள பள்ளியில் 9 வயது மாணவி ஒருவர் 4ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இந்த மாணவியை பள்ளி வளாகத்தில் இருந்த யாரும் இல்லாத வகுப்பறைக்கு வருமாறு தலைமை ஆசிரியர் அழைத்துள்ளார். அங்கு வந்த மாணவிக்கு தலைமை ஆசிரியர் அருவறுக்கத்தக்க செக்ஸ் வீடியோவை காட்டி அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். தற்போது அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: