• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெண் போலீசை பாலியல் வன்புணர்வு செய்த மாமனார்: கேள்விப்பட்டு முத்தலாக் கொடுத்த போலீஸ் கணவர்!

பெண் போலீசை பாலியல் வன்புணர்வு செய்த மாமனார்: கேள்விப்பட்டு முத்தலாக் கொடுத்த போலீஸ் கணவர்!

மாதிரி படம்

மாதிரி படம்

பெண் போலீசின் கணவரான அபித்தின் தந்தை நசீர் அகமதுவும் போலீஸ் தான். அவர் காசியாபாத்தில் உள்ள ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

  • Share this:
பெண் போலீஸ் ஒருவரை அவரது மாமனாரே பாலியல் வன்புணர்வு செய்ததும், இதை கேள்விப்பட்ட அவருடைய கணவர் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி முத்தலாக் கூறி விவாகரத்து செய்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மாமனார் என இருவரும் போலீசாக பணியாற்றி வருவது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண் மீரட்டில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் மீரட்டைச் சேர்ந்த அபித் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகியிருக்கிறது. அபித்தும் மீரட்டில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் தான் காவலராக பணியாற்றி வருகிறார். அபித்தின் தந்தையான நசீர் அகமதுவும் போலீஸ் தான். அவர் காசியாபாத்தில் உள்ள ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

Also Read:   பெண்கள் இருப்பதே தெரியாதாம்: 41 ஆண்டுகளாக காட்டில் தன்னந்தனியாக வாழும் ரியல் டார்ஜான்!

இந்நிலையில் கடந்த புதன் கிழமை (ஜூன் 23) இரவில் தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், தன்னுடைய மாமனாரான நசீர் அகமது, தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், பின்னர் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் அந்த பெண் போலீஸ் கோத்வாலி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். மேலும் திருமணத்துக்கு பின்னர் கணவர் வீட்டார் தன்னை வரதட்சனை கேட்டு அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், மாமனார் தன்னை பாலியல் வன்புணர்வு செய்தது குறித்து தனது கணவரிடம் தெரிவித்த போது அவர் தனக்கு ஆதரவாக இல்லாமல், கோபமடைந்து அடித்து துன்புறுத்தி முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாகவும் அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read:   தேசிய ட்ரெண்டிங்கில் #TalibanOurGuardians: வேலையைக் காட்டிய பாகிஸ்தான் நெட்டிசன்கள்! 

பெண் போலீசை, போலீசாக பணியாற்றி வரும் மாமனாரே பாலியல் வன்புணர்வு செய்ததும், போலீசான கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாகவும் வெளியாகியிருக்கும் தகவல் உத்தரப்பிரதேச காவல்துறையினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெண் போலீசின் புகார் குறித்து மீரட் காவல் கண்காணிப்பாளர் வினீத் பாத்நகர் விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: