உ.பியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பெண் வேட்பாளரின் சேலையை பிடித்து இழுத்து அட்டூழியம் - அதிர்ச்சி வீடியோ

வைரல் வீடியோ

பெண்ணின் சேலையை பிடித்தும் இழுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த பெண்ணுடன் வந்தவர்கள் சேலையை பிடித்த இழுத்த மர்ம நபர்களிடமிருந்து தப்ப வைத்தனர்.

  • Share this:
    உத்திரபிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பெண் வேட்பாளரின் சேலையை சிலர் பிடித்து இழுத்து அட்டூழியத்தில் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உத்திரபிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தல் பணிகளின் போது அங்கு வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. தற்போது பெண் வேட்பாளரின் சேலையை சிலர் பிடித்து இழுத்துள்ளனர்.

    லக்னோ அருகே லக்கிம்பூர் என்ற பகுதியில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய் வந்துள்ளார். மனு தாக்கல் செய்ய வந்த பெண்ணின் சேலை பிடித்து இழுத்து மனபாங்கம் செய்துள்ளனர்.

    Also Read : கேரளாவில் கர்ப்பிணி உட்பட 10 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு!

    பெண்ணின் சேலையை பிடித்தும் இழுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த பெண்ணுடன் வந்தவர்கள் சேலையை பிடித்த இழுத்த மர்ம நபர்களிடமிருந்து தப்ப வைத்தனர். இந்த சம்பவத்திற்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.



    பாஜக தொண்டர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுப்பட்டார்கள் என்றும் யோகி ஆதித்யாநத்தின் பதவி ஆசை கொண்ட வெறியர்கள் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார். மேலும் உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் 14 க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை நடைபெற்றது.

    Also Read : திருமண நிகழ்ச்சியில் விருந்தினர்கள் முன்னிலையில் மணமகனை செருப்பால் அடித்த தாய்

    அடுத்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக,உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க. 75 இடங்களில் 67 இடங்களை வென்றது. சமாஜ்வாதி கட்சி ஐந்து இடங்களை மட்டுமே வென்றது என்பது குறிப்பிடதக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: