ஹோம் /நியூஸ் /இந்தியா /

படித்தவுடன் கிழித்துவிடு...8ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட்

படித்தவுடன் கிழித்துவிடு...8ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட்

மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்

மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்

ஆசிரியர் ஒருவர் 8ஆம் வகுப்பில் படிக்கும் மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னூஜ் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் ஹரி ஓம் சிங். இவருக்கு வயது 47. இவர் தனது பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு வாழ்த்து மடல் ஒன்றை கொடுத்து அதில் உள்ள செய்தியை படித்தவுடன் கடிதத்தை கிழித்து விடவும் என்று கூறியுள்ளார்.

புத்தாண்டு விடுமுறைக்கு முன்பாக டிசம்பர் 30ஆம் தேதி பள்ளியில் வைத்து இதை அவர் தந்துள்ளார். வீட்டிற்கு சென்று அதை படித்து பார்த்த போது தான் மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  ஆசிரியர் ஹரி ஓம் சிங் மாணவிக்கு 12 வரிகளில் காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த ஆசிரியர் கடிதத்தில், "நான் உண்மை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

விடுமுறை நாள்களில் உன்னைப் பிரிந்து வாடுவேன். எனவே, நேரம் கிடைக்கும் போது என்னைத் தொடர்பு கொண்டு அழைத்து பேசு. முடிந்தால் நேரில் வந்து பார். நீ என்னை உண்மையாக காதலித்தால் நிச்சயம் பார்ப்பாய்" என்று எழுதியுள்ளார்.

கடைசியாக இந்த கடித்தத்தை படித்தவுடன் கிழித்து போட்டுவிடு, யாரிடமும் காட்ட வேண்டாம் என்றும் அதில் எழுதியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் விவரத்தை கூறி, ஆசிரியரிடம் சென்று விசாரித்துள்ளனர். தனது செயலுக்கு மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த ஆசிரியர் ஹரி ஓம் சிங் பெற்றோரை மிரட்டியுள்ளார்.

இதையும் படிங்க: என் பக்கத்துல உட்காரு...பேசிக்கொண்டிரு..விமானத்தில் பெண் ஊழியர்களிடம் சில்மிஷம் செய்த வெளிநாட்டினர்

பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும், மாணவியை காணாமல் ஆக்கிவிடுவேன் என்று அவர் மிரட்டியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

First published:

Tags: Crime News, Love, School Teacher, Uttar pradesh, Viral News