உ.பி.யில் 1 லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர் கலந்து 85 குழந்தைகளுக்கு விநியோகம்...!

உ.பி.யில் 1 லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர் கலந்து 85 குழந்தைகளுக்கு விநியோகம்...!
News18
  • News18
  • Last Updated: November 29, 2019, 1:59 PM IST
  • Share this:
உத்தரப்பிரதேசத்தில் மதிய உணவின் போது ரொட்டி மற்றும் உப்பு வழங்கப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக ரொட்டி மற்றும் உப்பு வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திருந்தது. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இந்த செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அம்மாநிலத்தில் மேலும் ஒரு சம்பவம் இதேபோன்று நடந்துள்ளது. ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சலைபன்வா என்ற இடத்தில் இருக்கும் தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் பால், தண்ணீர் கலந்து விநியோகிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் என்றால் கொஞ்ச நஞ்சமல்ல... ஒரு லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர் கலந்து அது 85 மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
First published: November 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்